பக்கம்:உதயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகன் திருப்பள்ளியெழுச்சி
(திருப்போரூா், சிதம்பரசுவாமிகள் அருளியது)

திருமலி குணதிசை அருணன்நல் உதயம்

செய்தனன் இருவினைச் சமமல பாகப்

பருவம துடையவர் தமதுளம் எனவே

பாரகம் விளங்கின. அவர்குணக் கிரிமேல்

அருளொளி வீசிநீன் றிலகுமுன் பதம்போல்

அருக்கனும் குணதிசைப் பொருப்பெழு கின்றன்

இருளறு குறுமுனி பரவிய போரூர்

இறையவனே பள்ளி எழுந்தரு ளாயே.                   1

ஆடுற மணிமயில் சிறைவிரித் ததன்மேல்

அருளொளி திகழநீ எழுந்தருள் முறைபோல் 

பீடுறு மரகதக் குரகதம் பூண்ட

பெருந்தடங் தேர்மிசை எழுந்தனள் கதிரோன் 

வாடுறு தாமரை கினதருள் அடைந்த

மாதவர் முகமென மலர்ந்தன எங்கும் 

எடவிழ் மலர்ப்பொழில் பொதுளிய போரூர்

இறையவனே பள்ளி எழுந்தரு ளாயே.                    2

பகாரு சுடர்விடும் உனதயில் கண்ட

பதகர்தம் மனமெனச் சுரர்மனம் எனவே 

புகருடு மழுங்கின விகசிதம் ஆகிப்

பொலிந்தன முளரிகள் தடந்தொறும் உனது 

திகழ்பதம் அடைந்தவர் உயிர்ச்சிறு போதம்

தேய்ந்தென மதியொளி தேய்ந்தது குணபால் 

இகலறு கதிரெழு கின்றது போரூர்

இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே.                     3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/12&oldid=1198160" இலிருந்து மீள்விக்கப்பட்டது