பக்கம்:உதயம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உதயம்

தானம துதவிய கரங்கொடு பாரி

சாதநன் மலர்மழை பொழிந்தனர் பணிந்தே

ஏனலம் புனமலி சாரலம் போரூர்

இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே.                     7

மறைமுடி உணர்ந்தவர் மறையவர் அடியார்

வருபரி சாலகர் அரசர்கள் வணிகர் 

குறைவறு வளவர்கள் மற்றுளர் எவரும்

குழுமியே வடமொழி தென்மொழிப் பாவால் 

நிறைதய வுடனினேப் புகழ்ந்துநின் றேத்தி

நீளுறு தண்டெனப் பணிக்தெழு கின்றர் 

எரிமணி அருவிகள் சொரிகிரிப் போரூர்

இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே.                      8

விலையறு நவமணி மாலைகள் கொணர்ந்தார்

வெயில்விடு குலிசகே யூரங்கள் கொணர்ந்தார்

அலகறு மணிசெறி மகுடங்கள் கொணர்ந்தார்

ஆழிம தாணிகள் நூபுரம் கொணர்ந்தார் 

கிலைபெறு கவரிதழ் நேத்திரங் கொணர்ந்தார்

நிறைந்துளம் வேண்டிய பெறவுறப் பணிந்தார் 

ஏலையறு பெருவரம் அருள்செயப் போரூர்

இறையவனே பள்ளி எழுந்தரு ளாயே.                       9

ஐங்கரம் கொடுதழு வுறநினை ஒருகொம்

பானேயுள் மகிழ்ந்தது முக்கணம் பொருப்புன் 

பங்கய முகவணி கண்டுகண் களிப்பப்

பரிவொடு கினேந்தது பனிவரை உயிர்த்த 

செங்கயல் விழிப்பசும் பிடிகின மடிமேல்

சேர்த்தருட் பால்தரத் திருவுளத் துனுமீண் 

டெங்களே ஆண்டுகொண் டருளிய போரூர் 10.

இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே.
            ———————
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/14&oldid=1198199" இலிருந்து மீள்விக்கப்பட்டது