பக்கம்:உதயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருட்பெருஞ்சோதி திருப்பள்ளியெழுச்சி
(அருட்பிரகாச வள்ளலார் அருவியது)

பொழுது விடிக்ததென் உள்ளமென் கமலம்

பூத்தது பொன்னெளி பொங்கிய தெங்கும்

தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம்

சொல்லுதல் வேண்டுமென் வல்லசற் குருவே

முழுதுமா னுனென ஆகம வேத

முறைகளெல் லாமொழி கின்றமுன் னவனே

எழுதுதற் கரியசீர் அருட்பெருஞ் சோதி

என்தங்தை யே.பள்ளி எழுந்தரு ளாயே.                   1

துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்

தோன்றிடப் பொன்னெளி தோற்றிய கதிர்தான் 

சிற்குண வரைமிசை உதயம்செய் ததுமா

சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ங்க 

நற்குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்

நண்ணினர் தோத்திரம் பண்ணிகிற் நின்றர் 

எற்குண அளித்தவென் அருட்பெருஞ் சோதி என்னம்மை யே.பள்ளி எழுந்தரு ளாயே. 2

நிலந்தெளிந் ததுகணம் மழுங்கின கவனம்

நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற 

அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்

அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு 

புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்

போற்றியோ சிவசிவ போற்றியென் கின்றர் 

இலங்குரு அளித்தவென் அருட்பெருஞ் சோதி என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/15&oldid=1198218" இலிருந்து மீள்விக்கப்பட்டது