பக்கம்:உதயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
(சி. சுப்பிரமணிய பாரதியார் பாடியது)

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்

புன்மை இருட்கணம் போயின யாவும் 

எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி 

தொழுதுனே வாழ்த்தி வணங்குதற் கிங்குன்

தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துகிற் கின்றேம் 
விழுதுயில் கின்றன. இன்னுமெம் தாயே!

வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயே. 1

புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம்

பொங்கிய தெங்கும் சுதந்தர நாதம் 

வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய்

வீதியெ லாமணு குற்றனர் மாதர் 

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்

சீர்த்திரு நாமமும் ஒதிகிற் கின்ருர் 

அள்ளிய தெள்ளமு தன்னயெம் அன்னை

ஆருயி ரேபள்ளி எழுந்தரு ளாயே.                             2

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்

பார்மிசை கின்ைெளி காணுதற்கு அலங்தோம் 

கருதியின் சேவடி அணிவதற் கென்றே

கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம் 

சுருதிகள் பயந்தனே சாத்திரங் கோடி

சொல்லரு மாண்பின ஈன்றன அம்மே 

கிருதர்கள் நடுக்குறச் சூல்கரத் தேற்றுய் நிர்மலை யே பள்ளி எழுந்தரு ளாயே. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/18&oldid=1198278" இலிருந்து மீள்விக்கப்பட்டது