பக்கம்:உதயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவெம்பாவை

19

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றே

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ 

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணேத் துயின் றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருங்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் 

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.               4

மாலறியா நான்முகனும் காணு மலையினைநாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும். 

பாலூறு தேன்வாய்ப் படிமீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் 

கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று 

ஒலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.                          5

மானேநீ நென்னலே நாளைவந் துங்களே

நானே எழுப்புவன் என்றலும் நாணுமே 

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றே

வானே நிலனே பிறவே அறிவரியான் 

தானேவங் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும்

ஏனேர்க்கும் தங்கோகனப் பாடேலோ ரெம்பாவாய்.                6

அன்னே இவையும் சிலவோ பலவமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்

தென்னவென் முைன்னம் தீசேர் மெழுகொப்பாய்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/21&oldid=1200391" இலிருந்து மீள்விக்கப்பட்டது