பக்கம்:உதயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உதயம்

என்னுனே என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னுேங்கேள் வெவ்வேறய் இன்னம் துயிலுதி

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் (யோ

என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.?                  7

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருனண

கேழில் விழுப்பொருள்கள் பாடினேம் கேட்டிலேயோ

வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறே

ஊழி முதல்வனுய் நின்ற ஒருவனே

ஏழைபங் காளனேயே பாடேலோ ரெம்பாவாய்.                  8

முன்னேப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னேப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே 

உன்னேப் பிரானுகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்கா 

அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து (வோம்

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.                  9

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே 

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் .

வேதமுதல் விண்ணுேரும் மண்ணும் துதித்தாலும் 

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணுப் பிள்ளைகாள் 

எதவனூர் ஏதவன்பேர் ஆருற்ருர் ஆரயலார்

எதவனேப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.                     10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/22&oldid=1200439" இலிருந்து மீள்விக்கப்பட்டது