பக்கம்:உதயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருப்பாவை
(சூடிக்கொடுத்த நாச்சியார் அருளியது)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னுளால்

நீராடப் போதுவீர் போதுமினே நேரிழையிர் 

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் கந்தகோ பன்குமரன் 

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் 

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.                   1

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் 

பையத் துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணுேம் பாலுண்ணுேம் நாட்காலே நீராடி 

மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்

செய்யர் தனசெய்யோம் திக்குறளை சென்றேதோம் 

ஐயமும் பிச்சையும், ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.                2

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள்கம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினுல்

திங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,

ஓங்குபெருஞ் செந்நெ லுாடு கயல்உகளப் -

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி 

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.                    3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/26&oldid=1200561" இலிருந்து மீள்விக்கப்பட்டது