பக்கம்:உதயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உதயம்

ஒசை படுத்த தயிரரவம் கேட்டிலேயோ

நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி 

கேசவனேப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ

தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்.                 7

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் 

போவான்போ கின்றரைப் போகாமல் காத்துன்னேக்

கூவுவான் வந்துநின்றேம் கோது கலமுடைய 

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானே மல்லரை மாட்டிய 

தேவாதி தேவனேச் சென்றுகாம் சேவித்தால்

ஆவாவென் ருராய்க் தருளேலோ ரெம்பாவாய்.               8

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

துாபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும் 

மாமான் மகளே மணிக்கதவம் தாள்திறவாய்

மாமீர் அவளே எழுப்பீரோ உன்மகள்தான் 

ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ 

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

காமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.                  9

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனுய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 

காற்றத் துழாய்முடி நாராயணன்நம்மால் .

போற்றப் பறைதரும் புண்ணியனுல் பண்டொருநாள் 

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானே 

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.                   10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/28&oldid=1200634" இலிருந்து மீள்விக்கப்பட்டது