பக்கம்:உதயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருப்பாவை

29

உருது மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னுய் 

கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் 

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச் 

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.                    18

குத்து விளக்கெரியக் நோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் 

கொத்தலர் பூங்குழல் நப்பின்னே கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் 

மைத்தடங் கண்ணினுய் நீஉன் மணுளனே

எத்தனே போதும் துயிலெழ ஒட்டாய்காண் 

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.                  19

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் 

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றர்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய் 

செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னே நங்காய் திருவே துயிலெழாய் 

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணுளனே

இப்போதே எம்மை ராட்டேலோ ரெம்பாவாய்.                20

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றதே பால்சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள் 

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்




20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/31&oldid=1201830" இலிருந்து மீள்விக்கப்பட்டது