பக்கம்:உத்தரகாண்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

இரைபடுவதற்கு என்ன காரணம்? கிராமங்கள் தன்நிறைவு கண்டு, மக்களை வாழவைத்து, நலங்களைப் பெருக்கி, அவசியமான நகரங்களுக்கும் வளங்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொருளாதாரம் என்னவாயிற்று? இயற்கை தரும் கொடையை என்னுடையது ‘உனக்கில்லை’ என்று சகமனிதரைச் சாகவைக்கும் பிளவுகளில், அரசியலும் ஆதாயம் தேடுகிறது. ஏவுகணைகளை வெற்றிகரமாகச் செலுத்தும் சாதனை நிகழும் களத்திலேயே, பட்டினியாலும், குண்டு வெடிப்புகளாலும் எந்தப் பாவமும் அறியா மனிதர், ஊருக்குச் சோறு போடும் தொழில் செய்பவர் மடிகின்றனர்.

இந்த அவலங்களுக்குத் தீர்வு இல்லையா? எங்கு தொடங்கி எப்படிச் செயல்படுவோம்? எதிர்கால இந்தியாவுக்கு நம்பிக்கை உண்டா? உண்டு. அழிவுகளிலும், சில நல்ல விதைகள் தோன்றியிருக்கின்றன. அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில், பாரத விடுதலையைப் பற்றிய ஊக்கம் பெற்ற தலைவர்கள், அந்நிய மண்ணில் தான் கிளர்ச்சி பெற்றனர். வெளிச்சத்தில் நின்று பார்க்கும் போது தான், இருள் துல்லியமாகத் தெரிகிறது. நம் வேர்களை உணர்ந்து, சுயநம்பிக்கையும் எழுச்சியும் பெற்று, இலட்சியத்துக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் முன் வைத்தார்கள்.

இந்நாட்களில், புதிய கல்வியும் தொழில் நுட்பமும் பெற்ற இளைஞர் பலர், நம் வேர்களைத் தேடப் புத்துணர்வு பெற்றிருக்கின்றனர். பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இயக்கங்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அறியாமையையும் வறுமையையும் அகற்ற, அவற்றுக்குக் காரணமான ஊற்றுக் கண்களைத் தகர்க்க, செயல்படத் தொடங்கி இருக்கின்றன. நலிந்த இடங்களில் எல்லாம், புதிய ஊக்கமும் விழிப்புணர்வும் ஊட்ட, இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. ‘சிப்கோ’ இயக்கத்தில் இருந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், எழுத்தறியாமை ஒழிப்பு, சிறார் தொழில் சிறுமைகளைதல், சாதி சமய மோதல்களில் நிகழும் குரூர வன்முறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குக் காரணமான சமூக அவலங்களைக் களைதல், என்றெல்லாம் பல இலக்குகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/10&oldid=1049371" இலிருந்து மீள்விக்கப்பட்டது