பக்கம்:உத்தரகாண்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100   ✲   உத்தரகாண்டம்

னம்மா சோறு? எனக்கு வாணாம் போ!”என்று கோபித்துக் கொண்டு போவான். தட்டைத் தள்ளியிருப்பான்.

சந்திரி பூப்போட்ட சில்குச் சேலை உடுத்திக் கொண்டு எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தாள் அன்று.

“எங்கடீ?”

“ஆஸ்பத்திரிக்குத்தா. இன்னிக்கு நைட். தெரியுமில்ல?”

“அதுக்கு ரெண்டு மணிக்கே சீவிச்சிங்காரிச்சிக்கிட்டுக் கிளம்புற?”

“ஃபிரன்ட்ஸ் கூட சினிமாக்குப் போறோம்மா, அஞ்சறைக்கு முடிஞ்சதும் ஏழுமணி ட்யூட்டிக்கு அப்படியே போயிடுவேன். மிட்லன்ட்...”

“நீ காலைல கூடச் சொல்லாம, இன்னிக்குப் பாத்து என்ன சினிமா? ஊரே அல்லோலமாயிருக்குது?...”

“என் ஃபிரன்ட் டிக்கெட் வாங்கி வச்சிருக்காம்மா. காலையில இங்க கொடியேத்தம், பிறகு கலவரம், பேச முடியல. கலவரம்னா, நேர ஆஸ்டலுக்குத்தா போவே...” என்று கூறிவிட்டுப் போகிறாள். குழந்தை பாப்புவிடம் விளையாடிக் கொண்டிருந்தான். இவளுக்கு மனம் கொள்ளவில்லை.

அனுசுயாவும் சுசீலா டீச்சரும் விழா நடந்த இடத்தில் போடப்பட்ட விரிப்புகளைச் சுருட்டிக் கொண்டிருந்தார்கள்.

“தாயம்மா, பாப்பு எங்கே? இங்கே அஞ்சாறு பிள்ளங்க வெளில போகவே பயப்படுதுங்க. லஸ், குளத்தங்கரைப் பக்கம் தான் வீடாம். அவனக் கொண்டுவிட்டுட்டு வரச் சொல்லு...”

“ஏம்மா? அவ்வளவுக்கு கலவரமா ?”

“இல்ல ஆயா, வெளியே சில பாய்ஸ், வந்து நாங்க இந்தி படிக்கிற ஸ்கூல்ன்னு, தாலியக் கட்டிடுவோம்னு மஞ்சக்கயிறு வச்சிட்டு நிக்கிறாங்க. இந்தி நோட்டெல்லாம் வாங்கிக் கிழிக்கிறாங்க...”

“அட பாவிகளா? எவன்டாவன்? குலைய உருவிப் போடுறே? இவனுவ வாணா படிக்க வானாம்? அதுக்குன்னு ஏ, ஊரைக் கொளுத்தறானுவ? நீங்க வாங்கம்மா, உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/102&oldid=1049625" இலிருந்து மீள்விக்கப்பட்டது