பக்கம்:உத்தரகாண்டம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102   ✲   உத்தரகாண்டம்


அந்த அடியில் இருந்து அய்யா தேறவேயில்லை.

அன்றாடம் கத்தலும் கோசமும், பள்ளிக் கூடங்களை அடைக்கச் சொல்லி, கறுப்புக் கொடிகாட்டுதலும் அங்கே அரங்கேறின. அவள் மைந்தன் தலைமையிலேயே காலிக்கும்பல் வித்யாலயத்துள் நுழைந்தது.

உள்ளேயே இருந்த விடுதிச் சிறுவர் சிறுமியர் பலரும் பெற்றோரற்றவர்கள். சுப்பய்யாவும் மருதமுத்துவும் வன் முறையைச் சந்தித்தார்கள். பள்ளி மூடப்பட்டது.

அந்த வருசம் பாடங்கள் சரியாக நடக்கவில்லை. கோடை விடுமுறையோடு, அய்யா குடும்பம், பெயர்ந்து இந்த இடத்துக்கு வந்தது. பராங்குசம், நிர்வாகியானான்.

அவர் வைத்திருந்த காரை அன்றே காலிக் கும்பல் நசுக்கி உடைத்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் கார் எதுவும் வாங்கவில்லை. இங்கே வந்த பிறகு, சைகிள் ரிக்சாவில், தாம்பரம் ரயில் நிலையம் சென்று, மாம்பலத்தில் இறங்கிப் பள்ளியைப் பார்வையிட நடந்தே செல்வார். சில நாட்களில் வெளியூர் பஸ்களில் ஏறிச் சென்றும் இறங்கிக் கொள்வார். அப்போது, யார் யாரெல்லாமோ அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது... ராதாம்மா குழந்தையுடன் பம்பாயில் இருந்ததாக நினைவு. அவள் பையன் அந்த வீட்டுக்குள் வந்தான்.

9

காலை பத்தரை பதினோரு மணி இருக்கும். அவள் வீட்டின் வலப்பக்கம் படர்ந்து கிடந்த அவரைக் கொடிக்குக் குச்சிகள் நட்டு ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தாள். இன்னும் தை பிறக்கவில்லை. இது ஊன்றிய வித்தில் இருந்து வந்த கொடி அல்ல. ஏற்கனவே பந்தலில் அவரைபூக்கத் தொடங்கி இருந்தது... வாசலை ஒட்டி, கம்பி வேலி கட்டி இருக்கிறார்கள். முன்புறம் நேராக வீதிதான். ஆனால் எதிர்ச்சாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/104&oldid=1049628" இலிருந்து மீள்விக்கப்பட்டது