பக்கம்:உத்தரகாண்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    115


“வணக்கம் பெரீ...ம்மா...”

“என்னாப்பா, எப்படிருக்கிறீங்க, உங்களப்பாக்குற தேயில்ல?”

“நெல்லாகிறேம்மா. பொண்ணு நர்சு படிச்சிட்டி வீனஸ் ஆஸ்பத்திரில இருக்குது. பைய, இன்ஜினீர் படிக்கிறான். நமக்கு எப்பவும் போலதா வேல. கிழக்கால, ஜோதிகாபுரம் ஃபிளாட் கட்டுறாங்க இல்ல? அங்கதா வாட்சமேனா க்றேன். நைட்டு, பகல்ல இப்படீ எதானும் வேல செய்யறதுதா. காரியகாரரு சொன்னாரு. காயெல்லாம் பறிச்சிக்குதே. முன்ன இங்க ஆரஞ்சி இருந்திச்சே? அது காயி... ஆனா இதும் நெல்லாருக்கும் கொழுஞ்சி. அந்த மிலிடரிக்கார ஐயா இருந்தாரே, அப்ப எப்டீருந்திச்சி, வூடும் தோட்டமுமா... எனக்கு சொம்மா வாடகக்கி வுட்டிருந்தாகூட நெல்லா வச்சிருப்பேன்...”

“ஏன், நீங்க, உங்க தலவரையா மூலமாக் கேக்க வேண்டியதுதானே?”

“அதெப்படி? இவங்க வேற கச்சி. நாம போயி எப்டீப்பேச...? எம் பொஞ்சாதி சொல்லிச்சி, அதெல்லாம் போயி கேக்காத. இங்கியே நமுக்கு சவுரியம்னிடிச்சி. இன்னா? ஒதுங்க எடமில்ல. பொம்பிளங்க, வயசுப் பொண்ணுங்க, ஒரு தீட்டுத் தொவக்கம்னா, கட வீதிக்குப் பின்னால ரயில்வே லயன்பக்கம்தான் போவணும்னு இருந்திச்சி. இப்ப பொது கழிப்பற கட்டிட்டாங்க...”

“பொண்ணுக்குக் கலியாணம் கட்டிட்டீங்களா?”

“இல்லிங்க, பெரீம்மா... உங்கையில சொல்லுறதுக்கென்ன. அதுக்கு நர்சு படிக்க எடம் வாங்க எத்தினி கஸ்டப் பட்டந் தெரிமா..? அப்ளிகேசன் போட்டு, தாசில்தார் சர்ட்டிவேட்டு அது இதுண்ணு அல்லாம் வாங்கிக்கினு போனா, அங்க, ரூவா அம்பதாயிரம் வச்சாதா எடம்னா, ஒரு கஸ்மாலம். தலவர், புரவலரையா கீறாருங்க, அமைச்சரா, இந்த வட்டம்மிச்சூடும் கச்சில நாந்தாகிறே... உனுக்குக்கூட தெரிஞ்சிருக்கும். மின்ன, இங்க தியாகி அய்யா ஒடம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/117&oldid=1049653" இலிருந்து மீள்விக்கப்பட்டது