பக்கம்:உத்தரகாண்டம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124   ✲   உத்தரகாண்டம்


“இப்ப வீட்ல ரணகளம். சினனவ, பேசாம என் ஸ்கூலிலேயே படிக்க வச்சிட்டிருப்பேன். அது ஒழுங்கா வந்திருக்கும். அரசுப் பள்ளிக்கூடம், இவுரு அந்தசுக்கு சரியில்லேன்னு, ஆயிரம் ஆயிரமாப் புடுங்குற ஸ்கூல். அங்கேந்து, ‘மிஸ் எலிகென்ட்’ போட்டிக்கு இந்த இளசுகள அனுப்புறாங்களாம். இவ போவேன்னு நிக்கிறா. மாசம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம அதுக்கு லோஷன், கிரீம், லொட்டு லொசுக்கு... கண்ணத்துறந்திட்டே குழில புடிச்சி ஒரப்பன் தள்ளுறான். நா என்ன செய்யட்டும் ஆச்சிம்மா? வெள்ளம் கரைபுரள வருது. வெறும் கரையும் மண்ணு. குடும்பம்ங்கறது எப்பிடி நிக்கிம்?... இன்னிக்கு இந்த சங்கரி. நாளைக்கு இது எனக்கு, எம்புள்ளங்களுக்கு நேராதுன்னு என்ன நிச்சியம்? முதல்ல இந்தக் குடிக்கடைகளை மூடமாட்டாங்களா? எங்க ஸ்கூல்லேந்து, எட்டுனாப்புல ஒயின்கடை. அதுக்குப் போறவார எடமெல்லம் அம்புக்குறி போட்ட போர்டு. ராச்சசன்கள அழிச்ச, காளி எப்ப அவுதாரம் எடுத்து எல்லாம் நிர்மூலம் ஆக்கப் போறாளோ...!”

ஒருவாறு மூச்சு விட்டுத் தணிகிறாள்.

“ஆச்சி, கூடை எதானும் வச்சிருக்கீங்களா? இருந்தா குடுங்க... பணம் கொண்டாந்திருக்கிறேன்...” இடுப்பில் இருந்த சிறுபையை எடுக்கிறாள்.

“இல்லையேம்மா, நா போட்டு வைக்கிறேன். இப்ப முருகன் கடையில் அந்த நாருஇல்ல. மெயின் பஜார்ரோடுல இருக்குன்னான். நீங்க இப்ப பணம் ஒண்ணும் தரவேண்டாம். நா போட்டு வைக்கறேன்... பதனமாப் போங்கம்மா...”

12

“பதனம். எது பதனம்? யாருக்கு? எப்படி?...”

ஆயி முகம் தெரியாது அவளுக்கு. கிழமாகச் சவுங்கிப் போன அப்பனின் முகம் நினைவில் நிழலாகத் தெரிகிறது. அவளை இரண்டு தோள்களிலும் கால்கள் விழத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/126&oldid=1049808" இலிருந்து மீள்விக்கப்பட்டது