பக்கம்:உத்தரகாண்டம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134   ✲   உத்தரகாண்டம்

சாயுங்காலமே கைதானவர்கள் இருவரும் திரும்பி வந்து விட்டார்கள்.

13

ந்த வீட்டில் அவள் வந்தபிறகுதான் அம்மா, அவர்களுடன் கள்ளுக்கடை மறியலுக்குப் போனார். காங்கிரஸ் பெரியவர்கள் யாரேனும் வந்து சிவன் கோயில் முன் கூட்டம் நடக்கும். தவறாமல் அம்மாவுடன் இவள் போய்விடுவாள். கமலியின் தாய் தந்தையருக்கு, இவள் தங்கள் மகளை இப்படித் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது பிடிக்கவில்லை. கமலியின் அப்பா, அந்தக் கோடையில் புறப்பட்டு வந்தார். “சம்பு, நீ இப்படி நடப்பது கொஞ்சமும் சரியில்ல. அப்பா கிடக்கிறார். உன் புருசனுக்கு வந்தவளா நடந்துக்க வேண்டாமா? அவன் என்ன ஆனாலும் உனக்குத் தாலி கட்டின புருசன். அவனை நீ மதிக்கணும். என்னமோ உன் வீட்டு மாட்டுக்காரன விட மோசமா நடத்தற?”

அம்மா சமையலறையில்தான் இருந்தார். அவள் அங்கே இருப்பது தெரியாமல் அவர் தணிந்த குரலில் கண்டித்தார்.

“ராமு, இந்த விஷயத்தில் நீ தலையிட வேண்டியது அநாவசியம். இது நான் பிறந்த வீடு. என் தாய் வீடு. இங்கு நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன். இங்கே குழந்தை இருக்கா. இவளை வச்சிண்டு இதுக்குமேல் பேச விரும்பல. உன் பெண்ணை நீ தாராளமா கூட்டிண்டு போ?”

“...யாரு... இதுதான் அந்தப் பறச்சனியனா?” ஒட்டிக் கொண்டிருந்த அவளை, அடிக்கக் கை ஓங்கினார். அப்போது அம்மா அந்த ஓங்கிய கையைப் பற்றிக் கொண்டார்.

“இத பார் ராமு. உம் பொண்ண நீ கூட்டிண்டுபோ. வேற விவகாரம் பண்ணாதே. வீணா வார்த்தையைக் கொட்டாதே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/136&oldid=1049825" இலிருந்து மீள்விக்கப்பட்டது