பக்கம்:உத்தரகாண்டம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   145

எப்படியோ அந்தக் கிளை மறுபடியும் சொந்த மண்ணில் தறிக்காமல்...

சட்டென்று வண்டி ஒதுங்கி நிற்கிறது.

“என்னப்பா?...”

காரோட்டி வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்குகிறார். கண்ணாடியை இறக்கி, சவுந்தரம் பார்க்கிறாள். “எதோ ஆக்ஸிடன்ட் போல இருக்கு போலீசு ஏகத்துக்கு நிக்கிறாங்க?”

பேசாமல் அவள் வீடு திரும்பியிருப்பாள்.

வயிற்றை சங்கடம் செய்கிறது. “யம்மா, கதவத் தொறந்துவுடு; நா எறங்கிக்கிறேன்.”

“கதவைத் திறந்து கொண்டு அவள் முதலில் இறங்க, இவளும் இறங்குகிறாள். நிறைய வண்டிகள் நிற்கின்றன. சாலையின் போக்குவரத்தே நின்று கிடக்கிறது. இருவழியில், ஒரு வழியிலும் போக்குவரத்தில்லை. டிரைவர் வியூகத்துக்குள் புகுந்துவிட்டு வருகிறார்.

“சவுந்தரம் இதத்தானே, பார்க்குகிட்ட வந்திருக்கிறோம். நான் இப்படியே குறுக்க திரும்பி, பொடி நடையாப் போயிடுவேன். இன்னிக்குக் கிளம்பின நேரம் சரியில்ல போல. நீங்க பண்டிகைத் துணி வாங்கிட்டுப் போறீங்க, பதனமாப் போய்ட்டு வாங்க...”

“ஒரு பொண்ணு அடிபட்டுக் கிடக்கு. பிரியாணி பொட்டலங்க சிதறிக்கிடக்கு. கட்சிக் கொடி போட்ட ஆட்டோ நிக்கிது...”

“சரியான ‘ஈவ்டீசிங்’ கேசுப்பா, இந்தப் பொறுக்கிக, ஆட்டோவில பிரியாணிப் பொட்டலத்த வச்சிட்டு, பார்க்குப் பக்கம் நடந்திட்டிருந்த பொண்ணுகளத் துரத்திட்டு கைபுடிச்சி இழுத்திருக்கானுவ. முக்கியமான நபர் போன எடம் தெரியாம நழுவிட்டாகட இருந்த பொறுக்கிக அம்புட்டுக்கிட்டாங்க...”

உ.க.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/147&oldid=1049984" இலிருந்து மீள்விக்கப்பட்டது