பக்கம்:உத்தரகாண்டம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   147

பதும் அங்கேயே நடக்கும் என்று சொல்கிறார்கள். இந்த லட்சணத்தில், பசுவதைத் தடுப்புச் சட்டமாம்!

வேகுவேகென்ற அந்தக் குடிசைக் கடைகள், இரத்தம் கருகிப் போன சாக்கடைகள், கறி கொத்தும் கட்டைகள் எல்லாம் கடந்து வருகிறாள்.

கோமாதா குலமாதா... பசுக்களைக் கும்பிட்டுப் பூசை செய்ய வேணும் என்று மடத்து ஆசாரிய சுவாமிகள் இப்போதும் சொல்கிறார். பத்திரிகைகளில் அவருடைய வண்ணப்படங்கள்.

பத்திரிகைக் கடைகளில் தொங்குகின்றன. கோமாதாக்கள், குப்பைத் தொட்டியில்தான் வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சொந்தக்காரன் இவை கறக்கும் வரை காலையிலும், மாலையிலும் தேடி வந்து கொண்டு போய்க் கரந்து கொள்வான்.

“யாருடீ அந்த ஆசாரியன்? எதுக்குக் கொலை பாதகம் பண்றான்?” என்று சம்பு அம்மாவின் ஆங்காரக் குரல் மின்னல் பாய்ந்தாற்போல் ஒரு கணம் உலுக்குகிறது. வண்டிக்காரன் தங்கவேலு சில நாட்களில் தன் மூன்று நான்கு வயசுப் பிள்ளைகளை அழைத்து வருவான்.

“டேய், முருகா? இங்க வாடா!” என்று அம்மா கூப்பிடுவார்.

“சாப்பிடுறியா?” என்று கேட்பார். எப்போது கேட்டாலும் அழகாக ‘உம்’ என்று தலையசைப்பான். அந்தப் பெருமாட்டிக்கு எந்தக் குழந்தையைக் கண்டாலும் சோறு பிசைந்து ஊட்டும் தாபம் தோன்றும் போலும்! ஒரு பட்டை வெள்ளிக் கிண்ணத்தில் தயிரூற்றிச் சோறு பிசைந்து கொண்டு வருவாள். அவனை ஊஞ்சற் பலகையில் உட்கார்த்தி வைத்துச் சோறூட்டுவாள். “கொழம்பு சோறு வேணுமா?”

அதற்கும் ‘உம்’ என்று தலையசைப்பான். “வயிறு என்னை இடிக்கிறது... உங்கம்மா இன்னிக்கு என்ன குழம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/149&oldid=1049986" இலிருந்து மீள்விக்கப்பட்டது