பக்கம்:உத்தரகாண்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    13


“ரங்கசாமி ?”

“ஐயா?” என்று அவன் ஓடி வருகிறான்.

“சில்லுனு கொஞ்சம் மோர்... அம்மா...!”

உள்ளே வந்து அடைந்த அவளைக் கொக்கி போட்டு இழுக்கிறானா? உழக்குத் தயிரைக் குறுக்கி, பானையில் இருந்த நீரை ஊற்றி, உப்பும் சீரகத்துள்ளும் தூவி தவலைச் செம்பில் கொண்டு வந்து பலகையில் வைக்கிறாள்.

என்ன வீராப்பானாலும், வயிற்றுச்சதை அசையாமலில்லை. இவனை அவள் எப்போது பார்த்தாள்? இந்தப் பக்கம் ஏதோ விழா- கல்யாணம் என்று வந்ததாகச் சொன்னான். மாலை சால்வை என்ற வரிசைகளை ஒரு கட்சிக்காரன் அவளுக்குத் தெரிவதற்காக வாங்கிக் கொண்டு நின்றான். இவள் அப்போது வாசல் மேல் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

அப்பனைப்போல் கறுப்புத்தான். எடுப்பான முகம். சாதிப்பேன் என்ற திமிர் தெரியும் பார்வை. கட்சிக்கரை வேட்டி.

இவள் அலட்சிய பாவத்துடன் விசிறிக்கட்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

“எப்படி இருக்கீங்கம்மா? உங்க மருமவதா பாத்துட்டு, கூட்டிட்டு வாங்கன்னு நச்சரிக்கிறா. மஞ்சு கல்யாணத்தப்ப வந்திட்டு உடனே கிளம்பிட்டீங்க. புது வீடு வசதியா கட்டிருக்கு உங்க இஷ்டப்படி கிணத்துல எறச்சி ஊத்திட்டுக் குளிக்கலாம். வயசு காலத்துல, மகன் செல்வாக்கா இருக்கறப்ப நீங்க இப்ப இருக்கலாமா?...” என்று கெஞ்சினான்; குழைந்தான்.

ஆப்பிலும் மலை வாழையுமாகத் தட்டுக்கள் வந்தன.

“இதெல்லாம் இங்க எதுக்குக் கொண்டாரீங்க? எனக்கு கூழுகுடிச்சித்தா பழக்கம். எனக்கு எதுவும் வானாம். இதெல்லாம் கொண்டு போயி அதா அங்க ரோட்டோரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/15&oldid=1049380" இலிருந்து மீள்விக்கப்பட்டது