பக்கம்:உத்தரகாண்டம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   159

ஆகும். ரயில் கேட்டு மூடிட்டா, ரொம்ப நேரமாயிரும். இவன் பின்னாடி வெள்ளயடிச்ச சுவரப் பாழு பண்ணிருக்கறத பாத்து, செவிட்டுப்பயல, அவருக்கு சோத்து நேரம் தப்பினா தாங்காது, சக்கர நோயிக்காரரு என்று செமையாக அடித்து விட்டாள். அழுது கொண்டே பையன் முதலாளியிடம் நேரமானதைச் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

இவனுக்குப் படுக்கை, பூட்டிய கதவின் பக்கம் கடையில்தான். இரண்டிரண்டு பேராக இரவு காவல். இவன் காவலிருக்கவில்லை. பஸ் ஏறி ஊருக்குப் போய்விட்டான். அவள் அம்மா திட்டி, அவல சுமந்து வருகையில் இவனைக் கூட்டி வந்து மன்னிப்புக் கேட்க வைத்தாள். “டேய், நீ நல்லா வரையிறனு ஏன் சொல்லல? உனக்கு இனிமே வரையிற வேலதா. உனக்கு வர்ணம் பிருஷ் எல்லாம் வாங்கித் தாரேன்! இந்தக் கடை வாணாம்!” என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது தேர்தல் வர இருந்தது. அவர் அரசியல் கட்சியின் பிரதான ஆதரவாளர். ஒவ்வொரு தெருவிலும் கட்சிச் சின்னங்கள், தலைவர் உருவம், சுலோகங்கள் எழுதுவது வேலையாயிற்று. பிடித்த வேலை, சம்பளம், மற்றவர் குடித்தாலும், பீடி சிகரெட் புகைத்தாலும் இவன் ஒழுக்கமாக இருந்தான். கட்சியில் இளைஞர் அணித் தலைவனாக இவள் பெயரன் நாகமணிதான் கட்சியை இளைஞர் அனைவருக்கும் உரியதாக ஆக்கினான்.

“அம்மா, இவுனப்போல வரையிறவனுக்கெல்லாம் சாராயம், பிரியாணி, இதெல்லாம் தா கொடுப்பாங்களாம். இவெ குடிக்கமாட்டா. இவுங்கப்பெ குடிச்சிக் குடிச்சிப் பாழாயிதா, நா ரெண்டு பொட்டபுள்ளகளயும் ஆத்தாளயும் கூட்டிட்டு இங்கு வந்து சந்தியில நிக்கிற. அந்த கடக்கார சாமி ரொம்ப நல்லவரு, அவுரு இவனுக்கு சம்பளமா குடுத்திடுவாரு. சாராயத்த வாங்கி ஊத்தி அடுத்த கட்சிக்காரனுவ இவனப்போல பயங்களக் கூட்டிட்டுப் போவாங்களாம். இவன ஒருக்க ராவுல போட்டு அடிச்சிட்டானுவ. மேலே பானர் எழுதிட்டிருந்தானா... எம்புட்ட நல்லா வரயிறா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/161&oldid=1050007" இலிருந்து மீள்விக்கப்பட்டது