பக்கம்:உத்தரகாண்டம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   161



அந்தக் காட்சி இவளுக்கும் கண்முன் உயிர்க்கிறது. ஆரஞ்சு வண்ண மேலாடை. முகம் சாய்ந்துகிடந்தது. இடுப்புக்குக் கீழ்... சிதைந்த கோலம்... கால் செருப்பு ஒன்று தள்ளிக் கிடந்தது. அவள் உன்னிக் கொண்டு பார்த்த காட்சி...

அவளுக்குப் புரிகிறது. வார்த்தைக்கு வார்த்தை அல்ல. தெருவில் நடக்கும் பெண் வேட்டை. அந்தக் காலத்து ராஜா ராணிக் கதைகளில், மோசமான ராஜகுமாரன் வருவான். அவன் குதிரையில் வந்தாலே பெண்கள் எல்லோரும் ஓடி ஒளிவார்கள். எவளேனும் தட்டுப்பட்டுவிட்டால், அவள் அந்தப்புரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு... கசக்கப்படுவாள்.

இங்கே அந்தப்புரம் தேவையில்லை...

“அம்மா... நீங்க மனசில வாங்கிட்டீங்களோ என்னவோ. பெத்தவங்க தேவையில்லேன்னு, தீந்து போயிட்ட காலம் இது. நீங்க ரொம்ப வயிராக்கியமா, உங்க மகன், இன்னைக்குப் பெரிய பதவியில இருக்கிறவர் வந்து ரெண்டு மாசத்துக்கு முன்ன கூடக் கூப்பிட்டதாகவும், நீங்க முகம் குடுத்தே பேசலன்னும் ரங்கசாமி சொன்னான்னாலும், இந்தப் பய்ய, அப்புராணி. அப்படிச் செய்யிறவ இல்ல. ஏதோ பிரியாணி சாப்பாடுன்னுற ஆசயிலதா போயிருக்கா. அவன் தண்ணி கிண்ணிகூடப் போடுறவ இல்ல. போர்டு எழுதுற தொழில்னு ஒண்னு நடத்துற பயல் தண்ணிலேயே மிதப்பவன். இவந்தா வேலை செய்யிறவன். கண்ணால பாத்தவங்க, உங்க பேரன் நாகமணிதா அந்தப் பெண்ணத் துரத்திட்டு வந்து கையப்புடிச்சி இழுத்தான்னு சொல்றாங்க. ஆனா அவன் விர்ருனு ஸிக்னல் எது இருந்தான்னன்னு தப்பிச்சிட்டான். பைக் மட்டுந்தா இருந்திருக்கு. எதுவும் புரியல. குற்றம் பண்ணினவங்க தப்பிச்சிடுறாங்க. இது வெறும் ஈவ் டீசிங் மட்டுமில்ல. கொலைன்னு வழக்குப்பதிவு செஞ்சிட்டாங்க. அந்தப் பொண்ணு, கல்யாணமான பொண்ணாம். புருசன்காரன் துபாய்ல பணம் சம்பாதிக்கப்

உ.க.- 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/163&oldid=1050010" இலிருந்து மீள்விக்கப்பட்டது