பக்கம்:உத்தரகாண்டம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162   ✲   உத்தரகாண்டம்

போயிருக்கிறான். இது, அம்மாகூடத் தங்கி, சீட்டுக் கம்பெனி நடத்திட்டுருக்குன்னு சொல்றாங்க. நமக்கு அதெல்லாந் தேவையில்ல. நீங்க போயி உங்க மகனப் பாத்து ஒரு நாயத்தைச் சொல்லணும்.”

மலை உச்சியில் நிற்பது போல இருக்கிறது. சறுக்கிக்கீழே விழும் அபாயம் நாகமணின்னா, மரகதம் பெத்த புள்ளதான். ரஞ்சிதத்துக்கு மூத்தது மகள். ரஞ்சிதத்தை மணக்கு முன்பே, பாட்டுசான்ஸ் என்று வந்து வலையில் மாட்டிக் கொண்டு கர்ப்பமான நிலையில்தான் அவள் மீன் கழுவவும், கறிவாங்கி வரவும் மசாலை அறைக்கவும் வருவது போல் வந்து ஊன்றினாள். அவளே தான் வந்து சேர்ந்ததாகத் தெரிந்தது.

முழுகாமல் இருக்கும் மகளை ஆடிமாசத்துக்கு முன்பே வந்து வளையலடுக்கிக் கூட்டிச் செல்கையில் அவள் மகன் வீட்டில்தான் இருந்தாள். வளையல் அடுக்கும் வைபவத்தை இங்கேயே பெரிதாகக் கொண்டாடினார்கள்.

“அத்தே, நீங்க இந்த வீட்டிலிலே இருங்க...” என்று மருமகள் அவள் கையை பற்றிச் சூசகமாகச் சொல்லிவிட்டுக் காரில் சென்று ஏறிக் கொண்டாள்.

கார் அகன்றதும், உறமுறைகள் எல்லாரும் சென்றதும், விறிச்சிட்டுக் கிடந்த வீட்டில் அவளும் மரகதமும் மட்டுமே இருந்தார்கள்.

அந்தப் பெண் தடாலென்று அவள் காலில் விழுந்தாள். “அத்தே, நீங்கதா இப்ப எனக்குத் தெய்வம். இப்ப, ஒரு தாலிக்கவுரு போட்டதால, பணம் இருக்கிறதால, வளையல், நகை, சீலைன்னு விருந்து கொண்டாடுறீங்க. ஆனா, என் வயித்தில சுமக்கிறது உங்க மகன் மூலமான புள்ள. அப்பவே என்னக் கலியாணம் பண்ணிக்கிங்கன்னு கெஞ்சுனேன். ராயப்பேட்டையில கமலவேணி அம்மா வீட்ல இருக்கையிலேயே அடிக்கடி வருவாரு. ஒருநா, ரூமுக்கு வந்து பாடிக் காட்டுன்னு அழச்சிட்டுப் போனாரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/164&oldid=1050012" இலிருந்து மீள்விக்கப்பட்டது