பக்கம்:உத்தரகாண்டம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   163

பாடுனே. ‘கங்கைக்கரைத் தோட்டம்னு பாடின.’

“ரொம்ப நல்லாப் பாடுற. பாட்டோட எனக்கு ஒன்னியும் ரொம்பப் புடிச்சிருக்கு"ன்னு சொன்னாரு.

கண்களில் நீர், நடந்ததை உணர்த்தியது.

“பிறகு கட்சிக்கூட்டம் நடக்குற எடத்திலல்லாம், பாட்டுப்பாட அவுரே எழுதின பாட்டப்பாடச் சொல்லிக் கூட்டிப் போனாரு. போஸ்டரெல்லாம் போட்டாங்க. ரெண்டு தபா, மருந்து குடிச்சி கருவக் கலச்சிட்டேன். ‘எப்பங்க நம்ம கலியாணம்’பே. எலக்சன் முடியட்டும். நாம ஜெயிச்சதும் முதல் கலியாணம் நம்முதுதான்னு தலமேலடிச்சி சத்தியம் பண்ணிட்டு, இப்படித் துரோகம் பண்ணிட்டாரு. அத்தே!...”

கொதிக்கும் நெஞ்சோடு, அந்தத் தலையைச் சார்த்திக் கொண்டு ஆறுதல் மொழிந்தாள்.

‘நீங்க விட்டுப் போட்டுப் போயிட்டீங்க. அவுங்க, குளிக்கப்போயிருக்கப்ப, என்னக் கூப்பிட்டுக் கன்னத்தில அடிச்சாரு. “ஏண்டி? நீ திட்டம் போட்டுட்டு இங்க வந்திருக்கியா? நன்றிகெட்ட நாயே! குடுக்கிற பணத்த வாங்கிட்டு எங்கினாலும் போயிச் சாவு! நீ இங்க வந்து என்ன பயமுறுத்துறியா? வேசி!”ன்னு வெரட்டினாரு... அவுங்க குளிச்சிட்டு வந்து “ஏ மரகதம் என்னமோ மாதிரி இருக்க? அழுதியா”ன்னாங்க...”

“இல்லங்க ஒட்டட அடிச்சனா, தூசி விழுந்தி டிச்சி..."ன்னு சொல்லிச் சமாளிச்சேன்.

“இப்ப நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது அவுரு எப்படீன்னாலும் ஒருநா வீட்டுக்கு வருவாரு. நீங்க அவுர மரீச்சி, அவரு கையால என் கழுத்தில ஒரு மஞ்சக் கவுறு கட்டச் சொல்லணும். என் வயித்தில இருக்கிற புள்ளக்கு அப்பா இவுருன்னு எல்லாரும் அறியணும். நான் வேசியில்லன்னு நீங்கதான் உலகுக்குச் சொல்லணும்...”

ஒரு வாரம் அவன் வீடு திரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/165&oldid=1050013" இலிருந்து மீள்விக்கப்பட்டது