பக்கம்:உத்தரகாண்டம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164   ✲   உத்தரகாண்டம்


ஓர் அதிகாலைப் பொழுதில் வந்து கதவைத் தட்டினான்.

அவளும் மரகதமும் முன் கூடத்தில்தான் படுத்திருந்தார்கள். அவன் மேவேட்டி விசிற மேலே ஏறிப்போனான். காலையில் பத்தரை மணிக்கு அவன் கிழிறங்கி வந்து, குளியலறையில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டான். “காபி கொண்டா, மரகதம்?” என்று சட்டமாக ஆணையிட்டுவிட்டு முன் கூடத்தில் சோபாவில் உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்துக் கொண்டிருக்கையில் காபியுடன் இவள் சென்று நின்றாள்.

“ஏ கெளவி! உனக்கென்ன வேலை இங்க? ஏ இங்க வந்து தாவறுக்கிற? ஒரு தரம் சொன்னாப் புரியாது?”

“புரியிதுரா! புரியிது! நான் நீ இங்க சொன்னாலும் நிக்கப் போறதில்ல. போயிட்டே இருக்கிற. அதுக்கு முன்ன ஒரு காரியம் இருக்கு. அது ஆனதும் இந்த நிமிசமே கிளம்பிடுவ...”

“என்ன நீ? வெவகாரம் பண்ணுற? இதபாரு, ரஞ்சிதத்துக்கும் எனக்கும் எடைல புகுந்து எதுனாலும் பண்ண... பெறகு உன்னப் பெத்தவன்னு கூடப் பாக்கமாட்டே?”

“நீ பாக்கமாட்டன்னு தெரியிண்டா எனக்கு. அந்தப் பொண்ணு நல்லபடியா பெத்துப் பொழக்கணும். என் வாரிசு வெளங்கணும்னுதா இருக்கே. நீ போயி காபி குடிச்சிட்டு குளிச்சு முழுவி சித்த சுத்தியோட வா... உனக்கு சாமிபூதம்னு ஒண்ணும் நம்பிக்கை இல்லேன்னாலும், அவுங்களுக்கு இருக்கு. நீ அறிஞ்சோ அறியாமலோ, நம்பிக்கை உள்ளவங்ககூட சம்பந்தம் வச்சிட்டே. அதுனால...’

“அதுனால... ?”

“ஒரு நேர்ச்சடா... நீ குளிச்சி முழுவிட்டு வா, அது கும்பிட்டு முடிஞ்சதும், நானே கெளம்பிப் போயிடுவ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/166&oldid=1050015" இலிருந்து மீள்விக்கப்பட்டது