பக்கம்:உத்தரகாண்டம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    167

வெள்ளியும் காந்தி பாசறை என்று நடத்தினார்கள் என்பதெல்லாம் தெரியும். விநாயகசாமி மதுரையில் இருந்து வந்திருந்தார். கல்யாணம் காட்சி இல்லாதவர்.

“என்ன சொல்றீங்க மாமா?... இப்ப வாரியார் சுவாமி பிரசங்கம்னா, கூட்டம் கொள்ளல. அன்னைக்குக் கடவுளை நம்புறவன் முட்டாள்னு சொன்னவரே, இப்ப பேச முடியாம ஆயிட்டார் போல இருக்கு...”

“இல்ல ராதாம்மா... இத, இந்தப் பத்திரிகையப் பாருங்க...” அவர் கொடுத்த பத்திரிகைத்தாளை அவளும் பார்த்தாள்.

“என்ன, குருவியாரே? இளவழுதிப்புரவலர், இரு மனைவியருடைய கடவுள் தொண்டராய்விட்டாராமே? உண்மையா?”

“அன்னையாரின் நெருக்கடிக்கு, காதும் காதும் வைத்தாற் போல் தலை குனிந்து விட்டதாகக் கேள்வி. நமக்கெதற்கையா இந்த உள்துறை சமாசாரமெல்லாம்?”

ராதாம்மா சத்தம் போட்டுப் படிக்கிறாள்.

அவள் அங்கே நிற்கப்பிடிக்காமல் பின் பக்கம் சென்றாள்.

“ஆமாம், மாமா, இந்தப் பத்திரிக்கைக் குப்பை எல்லாம் நீங்க வங்குறீங்களா?”

“ராம் ராம்! எனக்கென்ன வேற வேலை இல்லையா, காசை இப்படிச் செலவழிக்க? நம்ம அய்யா பேர் போட்டு இந்த விலாசத்துக்கு இது அனுப்பப் பட்டிருக்கு?”

அய்யா மாடியில் இருந்ததால் அவள் அன்று அவரைப் பார்க்கவில்லை.

“பத்திரிகைகள் சீரழியிது இன்னிக்கு! நா இங்க பட்டணம் வந்த புதுசில, மெளண்ட் ரோட்லயோ டவுன்லயோ எதோ பெரிய கடையில, அப்பல்லாம், பொம்பிளங்க இப்படிப் போக முடியாது, செல்லலாமோ, எதுவோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/169&oldid=1050018" இலிருந்து மீள்விக்கப்பட்டது