பக்கம்:உத்தரகாண்டம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   193

தில்லை. அப்போது, மொட்டைத் தலையில் சிறுகுடுமியும், காவித்துணி ஜிப்பாவும் வேட்டியும், தோளில் மாட்டிய பையுமாக ஒருவர் வந்து நின்றார்.

“மாதாஜி, பாக்கி பாய் இருக்கிறாரா?” என்று கேட்டார். அவர் தமிழ் இந்திக்காரர் பேசுவதுபோல் இருந்தது.

அவள் தலை அசைத்தாள். ஆனால் அவர் இவள் எதுவும் பேசுவாள் என்பதை எதிர்பாராதவர் போல், விடுவிடென்று உள்ளே நுழைந்து விட்டார். அவள் கொஞ்சம் வெலவெலத்துப் போனாள். நாட்டு நடப்பு, அப்போதைய அரசியல் பின்னணி எதிலும் இவள் சிந்தை செல்லவில்லை. வீட்டின் ஒளியே மாய்ந்திருந்தது. வரமிருந்து பெற்ற மகள் கண்களை மூடி வீட்டை மீளாத் துயிலில் ஆழ்த்திவிட்டதாகவே இப்போதும் தோன்றுகிறது.

இந்த சாமியாரின் பின் அவளும் உள்ளே விரைந்தேகினாள். அம்மா அப்போது தான் எழுந்து பின் பக்கம் கிணற்றடியில் பல்துலக்கிவிட்டு அடுப்படிக்கு வந்து கொண்டிருந்தார். அய்யாவுக்குக் கொத்துமல்லி-- சுக்குக் காபிக்கு நீர் வைக்கையில் இவள் சேதியைச் சொல்ல சமையல் கட்டின் பின் புறமாக வந்தாள். ‘பால் கறந்திட்டு வரியா தாயம்மா?’

இவள் எதுவும் பேசாமல் கொட்டிலுக்குப் போனாள். கைகழுவிவிட்டு, மடிகழுவ நீரும், செம்புமாகப் பால் கறக்கப் போனாள். பாலைக் கறந்து கொண்டு வருகையில், அந்தச் சாமியார், கிணற்றடியில் நீரிழுத்து, பல்பொடியில் பல்துலக்குவதைப் பார்த்தாள். இப்போது மாடுகள் நின்ற அந்தப் பெரிய கொட்டில் இல்லை. கிணற்று முற்றத்தில் முன்பிருந்த துளசி மடம் மட்டும் இருக்கிறது.

குளிப்பறையில் பெரிய தண்ணீர் தொட்டி உண்டு. அதன் பக்கச் சுவரில், கிணற்றில் நீரிழுத்து, உள்ளே தொட்டி நிரப்பும்படி விடுவதற்கு ஒரு கோமுகம் போன்ற ‘வாய்’ உண்டு. குளிப்பறையில் சென்று தண்ணீர் இருக்கிறதா என்று

உ.க.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/195&oldid=1050068" இலிருந்து மீள்விக்கப்பட்டது