பக்கம்:உத்தரகாண்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18   ✲   உத்தரகாண்டம்

காலங்களில் அவரைக் காண வருவான். “தாயம்மா நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவு! கறைபடிந்த தடங்கள்” என்பார்.

இன்று பெரிய சாலையில் பெரிய ஒட்டல் கட்டி விட்டான். காரோடு வந்து தங்குறாங்களாம்...

“அய்யா, சாப்பாடு வைக்கட்டுங்களா?...”

பெரிய பெஞ்சின் பக்கம், சிறிய மேசையைப் போட்டு அவன் பின்பக்கம் வாழை இலை அறுக்கச் செல்கிறான். ஆனால் அதற்குள் தலைவர் விடுக்கென்று திரும்பி கோபத்துடன் வெளியே நடக்கிறார். அவருடைய மேல் வேட்டியின் விசிறியில் காரியரின் நீண்ட ஆணி மாட்டி, அது நிலைகுலையச் சரிகிறது. குப்பென்ற மசாலா வீச்சமும் வறுத்த அசைவமும், தாயம்மாளின் உள்ளக்கனலை வீசி விடுகின்றன.

2

கார்க்கதவு பட்டென்று அறைபடும் ஒசை கேட்கிறது.

கோபம்... கோபம் பாவம்... அது நீசத்தனமான செயல்களுக்கு வழி வகுக்கும். அவளும் கோபப்படுகிறாள்.

“ஏய் ரங்கா? என்ன எழவுடா இது? எதுக்குடா இதெல்லாம் இங்க கொண்டு வந்த?...”

அவன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான். சேவாகுருகுல அறங்காவலர் குழுதான் அவனை இங்கு நியமித்திருக்கிறது. அய்யா இறந்தபின், கிராமத்திலிருந்து வந்தவன்தான். இந்தப் புள்ளியைச் சுற்றி இவன் உறவுகள் ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டு நகரச்சந்திக்கு வந்திருக்கின்றனர். “இந்த நகரத்தில் குடியிருப்பவர் அதிகமானவர்கள் கிராமங்களில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக வந்து வேர்விட்டவர்கள்தா... எங்கப்பாவுக்கப்பா அந்தக் காலத்தில் வியாபாரம்னு வந்தார். டவுனில் மளிகைக்கடை வைத்தாராம். எங்கப்பா, சித்தப்பா அத்தை எல்லோருமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/20&oldid=1049390" இலிருந்து மீள்விக்கப்பட்டது