பக்கம்:உத்தரகாண்டம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208   ✲   உத்தரகாண்டம்

இருந்து கொஞ்சம் போடுகையில் சாமியார் ஓடி வருகிறார். “நீங்க போடாதீங்க சுவாமி. அது பசியில்லை; வெறி” என்று கையால் விரட்டி, “போ” என்று துரத்துகிறார். ஆனால் அது சுப்பய்யாவைக் குறி வைத்து ஓடிவர, தாயம்மா, தன் இலையில் இருந்து கொஞ்சம் கீழே போடுகிறாள். அதற்கு அது அடங்கவில்லை.

“நீங்க சாப்பிடுங்கம்மா...?” என்று சுப்பய்யா வற்புறுத்துகிறான். ஆனால் தாயம்மாவைத் துரத்தி, அவள் காலில் பாய்ந்து புடவையை இழுத்துக் கடித்ததும் அவள் பொங்கலை அப்படியே இலையுடன் நழுவவிட்டதும் மின்னல் வெட்டாக நிகழ்ந்து விடுகின்றன.

“அடாடா... நான் சொன்னேனே, கேட்டிங்களா?”... ஒண்ணும் ஆகாது தாயே, குழாயடியில் புண்ணைக் கழுவிக் கொள்ளுங்கள்.”

“சாமி! கொஞ்சம் குங்குமம் குடுங்க, கடிவாயில் வைக்கட்டும்” சுப்பய்யா குங்குமத்தை வாங்கி வருகிறான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மண்ணில் பொங்கல் சிதறி இருக்கிறது... நாய் வெறி தணிந்தாற் போல் ஓடியிருக்கிறது.

“தாயே, இப்படி உக்காருங்க, கொஞ்சம் பிரசாதம் தரச்சொல்றேன், சாப்பிடுங்க!” என்று பாதாம் மரத்தடி மேடையில் அமர்ந்த அவர்களைச் சாமியார் உபசரிக்கிறார்.

“இருக்கட்டுங்க. இத இவரே வச்சிருக்காரு...” சுப்பய்யாவின் பிரசாதத்தில் இருந்து சிறிதளவு உண்கிறாள். அவளுடைய உறுதி, துணிவு எல்லாம் நைந்து கரைகின்றன. வெறிநாய், சொறிநாய் கடித்திருக்கிறது... இதுவும் ஊழ்வினையா?

குடிலில் ஒரு பையனை நாய் கடித்துவிட்டது. உடனே அய்யா அவனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/210&oldid=1050143" இலிருந்து மீள்விக்கப்பட்டது