பக்கம்:உத்தரகாண்டம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   209

அழைத்துச் சென்றார். தொப்புளைச் சுற்றி பதினாறு ஊசிகள் போடவேண்டும் என்று போட்டார்கள் ‘அம்மா மாதிரி’ உறக்கத்தில் பிராணன் போகுமா?

பசி, பட்டினி, எல்லாம் உச்சக் கட்ட மரண பயத்தில்தான் கொண்டுவிடுமோ? சாயபு, சிறை உண்ணாவிரதத்தில் எப்படியெல்லாம் ஆசை காட்டி அதை முறிக்கச் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார். ராமுண்ணி...? சே! அந்த நெஞ்சுரம் ஏனில்லை?

மவுனமாக அவர்கள் அந்தப் பெரிய ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள். ஆங்காங்கே நின்ற கார்களில், வந்திருந்த பக்தர்கள் போகிறார்கள்.

மவுனம் கனத்திருக்கிறது.

“நீங்க எங்கியோ, வடக்கு அப்பவே போயிட்டதாச் சொன்னாங்க? இங்க வந்து எத்தினி நாளாச்சு? இப்பதா எங்கியும் இந்தி இல்ல. எங்க இருக்கிறீங்க? உங்கம்மா...”

“அவங்க அப்பவே ஊருக்குப் போனாங்க. அஞ்சாறு மாசத்துல போயிட்டாங்க. இருபது வருசமாச்சு. நீங்க எப்படி இங்க? பெரிய வீட்டில இல்லியா?”

அவள் அதற்கு விடை கூறாமல், “குருகுலம் போனீங்களா? பராங்குசத்தைப் பாத்தீங்களா?” என்று கேட்கிறாள்.

“என்ன என்னத்துக்கு வாங்க போங்கன்னு சொல்லுறீங்க? நா உங்க மகன் போல. சும்மா, சுப்பய்யா, இங்கு எங்க வந்தேன்னு கேளுங்க...”

அவள் மனம் இலேசாகிறது. “என்ன இருந்தாலும் நான் படிச்சு வேல பாக்குற கவுரவம் இல்லாதவ. எதோ நல்லவங்கள அண்டி ஊழியம் செய்ததில் பூப்பந்த வச்சிட்ட எலச்சருகுபோல. இப்ப இதுல பூவும் இல்ல; பசுமையும் இல்ல. நொறுங்கிப் போனாலும், உசுரு உணர்வு, அடங்கல...”

கண்ணீர் பொங்க, குரல் கரகரக்கிறது.

உ.க.-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/211&oldid=1050144" இலிருந்து மீள்விக்கப்பட்டது