பக்கம்:உத்தரகாண்டம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210   ✲   உத்தரகாண்டம்


“இதபாருங்க, விதின்னு சொல்றத இப்ப நானே நம்புறேன்... ராதாம்மா ஆஸ்பத்திரில இருந்தப்ப பார்த்தேன். பிறகும்-கடைசில, அய்யா அம்மாளையும் பார்த்தேன். அந்த இந்திக்களேவரத்துல, உங்க பய்யன் என்னை நேராக அடிச்சி, சட்டையக் கிழிச்சி, அவமானம் பண்ணினான். அப்புறமும் இங்கே இருந்தேன். அதுக்கும் மேலான அவமானம் வந்தது. ஓடிப்போனேன். எது அவமானம், எது இழுக்கு, எது தர்மம்னு ஒண்ணும் இப்ப புரியல. விதியின் கை எழுதிச் செல்லும் வாழ்க்கை...”

‘ஏம்பா, சுப்பய்யா, ராதாம்மா வீட்டுக்காரர், பையன்லாம் எங்க இருக்காங்க தெரியுமா?...”

“அவங்க அப்பவே நேவிலேந்து ரிடயராகிட்டாங்க. வடக்கே இமாலயப் பக்கம், போனாங்க. சிப்கோ மூவ்மெண்ட்ல தீவிரமா இருந்தாதா கேள்விப்பட்டேன்.”

“அது என்னப்பா?...”

“அதுவா, அங்கே பெரிய மரத்தெல்லாம் வெட்டிக் காடுகளை அழிச்சி, பரிசுத்தங்களை மாசுபடுத்துவதை எதிர்த்து ஓர் இயக்கம். ‘சிப்கோ’ன்னா ஒட்டிக்கிறதுன்னு அர்த்தம். கன்டிராக்ட் தடியங்க மரம்வெட்ட வரச்ச உங்கள மாதிரி பொம்பிளங்க அதை அப்படியே கட்டிட்டு ஒட்டிட்டு, எங்கள வெட்டிட்டு பின்னால மரத்த வெட்டுங்கன்னு சொல்ற இயக்கம்...”

நெஞ்சு உருகுகிறது “அய்யா, பய்யன்...?”

“பையன் அமெரிக்காவுல பி.எச்.டி. பண்றான்னு சொன்னாங்க அவங்க அத்தை இறந்து போனாங்க. வேற சேந்த மனிசங்க யாரையும் நான் பார்க்கல...”

“விக்ரம். அதுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணிலியா ?”

“தெரியல. இப்ப உலகமே கிராமம் மாதிரி சுருங்கிப் போச்சின்னு சொல்றாங்க. வியாபார, அதர்மத் தொடர்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/212&oldid=1050145" இலிருந்து மீள்விக்கப்பட்டது