பக்கம்:உத்தரகாண்டம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   211

கள்தா இறுக்கிப் புடிச்சிட்டிருக்கு. அதுக்குள் மனுசங்க ஒருத்தொருத்தர் தெரியாம வலைக்குள் இறுகிப் போயிட்டாங்க. எங்கியோ இருந்து வந்து கடை துறந்து கோழிக்கறி பண்ணி விக்கிறான்...”

“அய்யோ, அதெல்லாம் சொல்லாதீங்க...”

நிகழ்காலமே வேண்டாம் என்று சொல்வது போல், மரங்களினூடே வந்து வெளியே நிற்கிறார்கள். வரிசையாகச் செருப்புகள் வைத்திருந்த இடத்தில் சுப்பய்யா தன் செருப்பை இனம் கண்டு மாட்டிக் கொள்கிறான். அவளுக்குச் செருப்பணிந்து பழக்கமில்லை. வெளியேறுகிறார்கள்.


22

வர்கள் சாலையில் அடிவைக்கையில் ஒரு பஸ் வருவது தெரிகிறது இந்த ஆசிரமத்துக்கே ஒரு கும்பல் இறங்குகிறது.

“வாங்க ஏறுங்க; நாம போகலாம்?”

“வாணாம்பா, ஒரெட்டு நடந்து போயிரலாம்?”

“இப்ப இந்தப் புடிவாதம் வாணாம். ஏறுங்க” அவன் பலவந்தமாக அவளைப் பஸ்ஸில் ஏற்றுகிறான். “கே.ஜி. ஆஸ்பத்திரி. ரெண்டு டிக்கெட்” என்று சொல்லிவிட்டு மகளிர் இருக்கையில் காலியாக இருந்த இடத்தைப் பார்த்து உட்கார்த்தி வைக்கிறான்.

“கே.ஜி. ஆஸ்பத்திரியா? அங்கெ எதுக்கப்பா போவணும்? நாம மின்னாடியே எறங்கிட்டா குறுக்குச் சந்தில புகுந்து ஸ்கூல் பக்கம் திரும்பிடலாமே?”

“கொஞ்சம் வாய மூடிட்டு வரீங்களா ?”

அவன் முகம் ஏணிப்படிக் கடுப்பாக மாறவேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/213&oldid=1050146" இலிருந்து மீள்விக்கப்பட்டது