பக்கம்:உத்தரகாண்டம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212   ✲   உத்தரகாண்டம்


பெரிய சாலையில் அந்த ஆஸ்பத்திரி இருக்கிறது. வெகு நாட்களாகச் செயல்படும் ஆஸ்பத்திரி என்று பெயர். ஆனால் சென்று நெருங்கும் பிரபலம் பற்றி அவளுக்குத் தெரியாது.

சாலையில் அவர்கள் வந்திறங்கும் போது, பிற்பகல் மூன்று மணி இருக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என்று எங்கே பார்த்தாலும் தள்ளுபடி விழா. ஃபிரிட்ஜ், வாஷிங் மிசின் கிரைண்டர் என்று நடுத் தெருவுக்கே வருவதுபோல் கடைபரப்பி இருக்கிறார்கள். துணிக்கடைகளோ, பழக்கடையில் மொய்க்கும் ஈக்களைப் போல் மக்களைக் கவரும் பரபரக்குள்ளாக்கி இருக்கின்றன. ஒரு புறம் தலையணை மெத்தை விரிப்பு என்று மக்களைக் கூவி அழைக்கும் வாணிபம். இடைஇடையில் சிக்கன், மட்டன் மசாலா நெடி வீசும் உணவுக்கடைகள். குப்பைத் தொட்டிகளும் நிரம்பி வழியும் கழிபட்ட பிளாஸ்டிக் குப்பைகள்... ஏதோ தோசைக்கு இடையே வைக்கப்பட்ட உருளை மசாலா போல் உயர்ந்து போயிருக்கும். ஆஸ்பத்திரிக்குள் அவன் அவள் கையைப் பற்றிக் கொண்டு அழைக்கிறான்.

“யே, இப்ப எதுக்கு ஆசுபத்திரி? வுடுங்க!”

‘எதுக்கா? சொறி நாய்; வெறி நாய், விசம் நீரை உறிஞ்சி, நீர்சுண்ட, எச்சிமுழுங்க முடியாம, நாயபோல” அவள் விலுக்கென்று கையை உதறிக் கொள்கிறாள்.

“அதெல்லாம் ஒண்ணுமாகாது. அதான் அம்பாள் குங்குமம் வச்சாச்சே!”

“எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. முரண்டு புடிக்காம உள்ள வாங்க... எதோ சக்தி உங்களையும் தள்ளிட்டு வந்திருக்கு என்னையும் தள்ளிட்டு வந்திருக்கு. காரண காரியம் புரிபடல; வாங்க..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/214&oldid=1050147" இலிருந்து மீள்விக்கப்பட்டது