பக்கம்:உத்தரகாண்டம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214   ✲   உத்தரகாண்டம்


அவன் அந்தப் பக்கம் நகர்ந்ததும் இவள் வந்த வழியில் நடையைக் கட்டுகிறாள். கோயிலுக்குப் போனாள், நாய் கடித்தது, சரி. இவனைப் பார்த்து எத்தனை வருசம் ஆயிருக்கிறது? இப்ப தீரும் என்று வந்த வழியில் ஆயிரம் ரூபாய்க்கு ஊசியா? முருகா? இவள் மாசச் செலவு கூட அவ்வளவு ஆகாதே?

விடுவிடென்று கடைகளூடே அவள் நடக்கையில் அவன் விரைந்து வந்து அவள் கையைப் பற்றி நிறுத்துகிறான். கைப்பிடி இறுகுகிறது எலும்பும் நரம்புமாகத் தெரியும். அந்தக் கைக்கு இத்துணை வலிமையா?

‘என்னம்மா? திரும்பப் பாக்குமுன்ன எதோ பி.டி. உஷான்னு ஓடுறீங்க? நா முந்நூறு கட்டிச் சீட்டு வாங்கிட்டே! வந்து ஊசி போட்டுக்குங்க?”

“எனக்கு ஊசிகீசி ஒண்ணும் வாணாய்யா, நா அப்படி நாய் மாதிரி ஊளையிட்டுச் சாவணும்னு விதியிருந்தா, சாவறேன். என்ன வுடய்யா!”

அவன் விடையே கூறாமல் அவளை இழுத்து வருகிறான்.

கட்டுக்கட்டும் இடத்தில் ஒரு நர்ஸ் பெண், அவள் சேலையை அகற்றி, காலில பட்ட கடிக்காயத்தைப் பார்க்கிறாள். முழங்காலுக்குக் கீழ் ஆடு சதையில் கவ்வி இருக்கிறது. இரண்டு சுற்றுச் சீலையும் கிழிபட்டிருக்கிறது. இரத்தம் பட்டிருக்கிறது.

கடிவாயை மருந்து நீர் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கிறாள்.

“பல் ஆழமா மூணெடத்துல பதிஞ்சிருக்குபாரு... ஏம்மா போயி சொறி நாயக்கடிக்கிறீங்க இந்த வயசில...?” அவள் சிரிக்காமலே கடிபட்ட இடத்தில் மருந்துத்துணி வைக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/216&oldid=1050149" இலிருந்து மீள்விக்கப்பட்டது