பக்கம்:உத்தரகாண்டம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   215



“இந்தம்மாக்கு, புள்ள குட்டி, பேரன் பேத்தின்னு இல்ல. பொழுது போகல நேரா கோயிலுக்குப் போயி, சொறி நாயக் கடிச்சிட்டாங்க, போனாப் போவுதுன்னு, நா கோயிலுக்கு வந்தவ, இவங்கள தத்து எடுத்துக்கலான்னு இருக்கே...”

“அதும் சரிதா. வயசு எழுபத்தெட்டுன்னு போட்டிருக்கிங்க. இது இரண்டாவது குழந்தைப் பருவம். தத்தெடுக்கிறது சரிதான்..”

பஞ்சால் நன்றாகத் துடைத்து, பதமாக பிளாஸ்திரி போடுகிறாள்.

பிறகு, இடது கையில் ஊசியும் போடுகிறாள் இன்னொரு நர்ஸ்.

“ரொம்பத் தண்ணி படாம வச்சுக்குங்கம்மா ? நாளக்கழிச்சி வாங்க. அடுத்த ஊசி போட்டுக்கலாம்.”

வெளியே வருகிறார்கள்.

சுப்பய்யா ஓர் ஆட்டோவைக் கூப்பிடுகிறான்.

“ஏம்ப்பா, உங்கிட்டக் காசு ரொம்ப இருக்குதா? பொடி நடையா நடந்து போயிரலாமே?”

“உங்க கால்ல செருப்பில்ல. கால்ல காயம். ஏறி உக்காருங்க...” அவள் உட்காருகிறாள்.

“பள்ளிக்கூட வாசலில் கலகலப்புக் கூட்டம் இல்லை.

திரும்பும்போது, சங்கரி இருந்த வீட்டுக்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன... சொரேலென்கிறது...

“ஏம்ப்பா... கொஞ்சம் நிறுத்து?...”

அவன் தாண்டிப் போய் விடுகிறான். வீட்டுப் பக்கத்தில் அய்யப்பன் வாழைகள் இலைக்குப்பைகள் அலங்காரங்களை இரண்டு மூன்று நோஞ்சான் மாடுகள், பன்றிகள் இழுத்துப் போட்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/217&oldid=1050150" இலிருந்து மீள்விக்கப்பட்டது