பக்கம்:உத்தரகாண்டம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   217



உள்ளே சென்று சாப்பிடவும் பிடிக்கவில்லை. வாயிலிலேயே நிற்கிறாள். கறுத்து வாடிய முகத்துடன் வருகிறான்.

“ஏம்ப்பா? எங்கே போயிட்டே? நா ஒரு சோத்தப் பொங்கி வச்சிட்டுக் காத்திருக்கிறேன். பொழுது சாஞ்சு போச்சி? ஒருவேள சாப்புடத்தான் போனிங்களோ?...” வேகமாகச் சொற்கள் வருகின்றன.

“வந்து... அந்த ஓட்டு வீடு பிரிக்கிறாங்களே, அங்க யார் இருந்தாங்க?” சுருக்கென்று நெஞ்சில் கத்தி குத்திவிட்டாற் போல் வேதனை தோன்றுகிறது.

“வயசான ஓமியோபதி டாக்டர், ஏழைகளுக்கு வைத்தியம் பண்ணிட்டிருந்தார். இப்ப வரமுடியல போல இருக்கு. அவரு படப்பை பக்கத்திலேந்து வருவார்... சாப்பிட வரியா?”

“ஒரம்மா கிரீச் நடத்திட்டிருந்தாங்கன்னு சொல்றாங்களே, சங்கரின்னு...”

“அ... ஆமாம்.. அவளத்தான் நாலு மாசமாக் காணல. புறந்தவன் வந்து கூட்டிட்டுப் போயிட்டாப்பல...”

“நீ முதல்ல சாப்புட வா. எனக்குப் பசிக்கிதப்பா, ஊசிபோட்டதோ என்னமோ, என்னிக்கும் தெரியாத பசி...”

“நீங்க அவுங்களப் பாத்திருக்கீங்களா தாயம்மா...”

“முதல்ல நீ பசியாறு. பிறகு பாக்கலாம்...” இலையைப் போட்டு மணை போடுகிறாள். அவன் முகம் கழுவிக் கொண்டு வருகிறான்.

சோறு ரசம், துவையல்... மோர்...

அவன் இலையை எடுத்துக் கொண்டு செல்கிறான். இவள் கரைத்துக் குடிக்கிறாள்.

அப்போது ரங்கன் உள்ளே வருகிறான். பெஞ்சியில் கிடந்த தந்தி பேப்பரைப் பார்த்துக் கொண்டு நிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/219&oldid=1050154" இலிருந்து மீள்விக்கப்பட்டது