பக்கம்:உத்தரகாண்டம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    219

கடிச்சிட்டது. கூட்டிட்டுப்போயி ஆசுபத்திரில ஊசி போட்டுக் கொண்டாந்துவிட்டேன்.”

“அடாடா... என்னம்மா? இதுக்குத்தா நான் சொல்லிட்டேருக்கிறன். எந்த கோயிலுக்குப் போனீங்க? திருநீர்மலையா? ஏகாதசி கூட இல்லியே?...”

“இதபாரு ரங்கா. நா ஒண்ணும் வீட்டுக் கைதி இல்ல. உன் சோலியப் பார்த்திட்டுப் போ. அப்பிடிப் போனா போயிட்டுப் போறன்...”

அவன் ஒன்றும் பேசாமல் போகிறான். முகம் உப்பியிருக்கிறது.

சுப்பய்யா விளக்கு வைத்து, பிரார்த்தனை என்று அரைமணி உட்கார்ந்திருக்கிறான்.

“ஏம்ப்பா, நீ என்ன காரியமா வந்தேன்னே சொல்லல. அய்யா பாட்டுக்கு டிரஸ்ட்னு, எல்லாம் வச்சிருக்கிறதா சொல்றாங்க. ஆனா, கடைசி மூச்சை அவங்க வுடறப்ப நாந்தா இருந்தே. சுத்தப் பாலிலும் விசம் சேந்திடும்னு அப்பவே புரிஞ்சிட்டாங்க. இந்த இடத்துல, சத்தியமா, ஏழை எளிசுங்களுக்குக் கல்வியோ வைத்திய சேவையோ பண்ண, அம்மா பேரை வச்சி நடத்தணும்னு அவங்க எண்ணம். மாடில பீரோல, அம்மா, ராதாம்மா உபயோகிச்ச சாமான்கள், போட்டோ படங்கள், துணிமணி, வீணை எல்லாம் இருக்கு. அப்பவே பராங்குசம், என்னை அவங்க நெருக்கத்திலேந்து விலக்கணும்னு பார்த்தான் சுப்பய்யா. அய்யா, அம்மாவும் போன பிறகு, இந்த தேசத்த நினச்சி மனசொடிஞ்சி போனாங்க...”

“புரியிது...”

“என்னமோ, உன்னக் கண்டது எனக்கு இப்ப தெம்பா இருக்கு. முந்தாநா வந்து... அவ... என்ன மிரட்டுறாப்பல சொல்லிட்டுப் போயிருக்கிறா. இந்த இடம் மிச்சூடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/221&oldid=1050156" இலிருந்து மீள்விக்கப்பட்டது