பக்கம்:உத்தரகாண்டம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    221

பொம்புள ஒரு மாதிரின்னு இழுத்தா... பளார்னு அவன் கன்னத்துல ஒரு அறை விட்டிருப்பேன். அடக்கிக்கிட்டு ஆசிரமத்துல போய்ப் பார்ப்போம்னு தா வந்தே. அங்க யாரும் தங்கறாப்புலவே தெரியலேன்னாங்க...”

“சுப்பய்யா...!” என்று பீறிடும் அவள் குரல் அலறலாக ஒலிக்கிறது. அப்போது அவன் சட்டை உள் பையில் இருந்து அந்தக் கடித உறையை அவளிடம் கொடுக்கிறான். கை நடுங்குகிறது. அவள் பிரிக்கிறாள்.

தேவரீர், உயர்திரு, சுப்பய்யா வாத்தியார் அவர்களுக்கு, அடியாள் சங்கரி, அநேக கோடி நமஸ்காரங்கள். என்னைத் தங்களுக்கு நினைவிருக்கும். நான் இப்போது, 13 மயில்ரங்கம் வீதி, பாரதி புது காலனி என்ற விலாசத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். என் பெரியண்ணன் ராஜஸ்தானிலும் சின்னண்ணன் சிங்கப்பூருக்கும் போய்விட்டார்கள். அம்மாவும் காலமான பிறகு என் நிலை மோசம். நான் உங்களை அநுமான் செளக்கில் பார்த்துப் பேச முயற்சி செய்தேன். கண்டு கொள்ளாமல் போய்விட்டீர்கள். பிறகு அண்ணன் மகனுக்கு இங்கே இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்தது. ஒரு வீடு எடுத்துக் கொண்டு அவனைப் படிக்க வைக்க- அவனுக்கு சமையல் பண்ணிப்போட என்று முடிவு செய்து என்னை இங்கே கொண்டு வைத்தார்கள். முதலில் மூன்று வருசம் ஒருவீட்டில் மாடியில் இருந்தோம். பிறகு அவர்கள் காலி செய்யச் சொன்னதால், பக்கத்திலேயே சிறு வீடொன்றில் இப்போது இருக்கிறேன். அண்ணன் பையன் படிப்பு முடிந்து சிங்கப்பூர் போய் விட்டான். எனக்கு அவன் இருந்த வரையிலும் பாதுகாப்பாக இருந்தது. பிறகு, நானே ஒரு ஜீவனம் தேட வேண்டி, இதே இடத்தில, வேலைக்குப் போகும் தாய்மாரின் சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த வீட்டின் வாசல் புறத்தில் ஒரு நல்ல டாக்டர், வயசானவர், ஏழைகளுக்கான வைத்தியசாலை நடத்துகிறார். இரவு எட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/223&oldid=1050159" இலிருந்து மீள்விக்கப்பட்டது