பக்கம்:உத்தரகாண்டம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222   ✲   உத்தரகாண்டம்

மணிக்கு அவர் போய்விடுவார். காலை பத்தரை மணிக்கு வருவார். அதனால் இரவு நேரங்களில் எனக்குப் பயமாக இருக்கிறது. இங்கே யாரையும் நம்ப முடியவில்லை. எனக்குத்திக்கு இல்லை. இந்தக் கடிதம் கண்டவுடன் என்னை வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கு இங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை. உங்களைத் தான் தெய்வரூபமாக நம்பியிருக்கிறேன். உடனே தந்திபோல் பாவித்து வந்து தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும். தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். அடியாள், சங்கரி...


23

யந்தி டீச்சர் தெரிவித்த விவரங்கள் இரத்தக் கோடுகளாய் மின்னுகின்றன. தெய்வத்துக்கே உரியதாகப் புனிதம் காத்த மலரைக் கசக்கிப் புழுதியில் தேய்த்துவிட்டு, அதன் மீது, நாக்கூசும் அபவாத முட்களைப் படரவிட்ட கயவன் அரக்கனாக நின்று கொக்கரிக்கிறான். காவிப்பட்டு மணிமாலைகள்... சிவசக்தி ஆசிரமம் எப்படி?

பெத்த தாய், கூடப்பிறந்தவங்க, உழைப்பை வாங்கிட்டாங்க. யாருமே அவளைக் காப்பாற்றவில்லை. ஆனும் பெண்ணுமாக அஹிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றிச் சிறை சென்றார்கள்...

யு.ஜி.ல இருப்போம். சாப்பாடு கொண்டு வருவாங்க. சிநேகமாகப் பழகுவோம். தப்பு அபிப்பிராயம் வரக்கூடாதுன்னு கல்யாணம் பண்ணிக் கொள்வோம்...

பெண் நெருப்புத்தான். ஆனாலும் அவளைத் தவறாக ஆண் பயன் படுத்தினால், அழிவுதான். அந்த நெருப்பைப் பாதுகாக்க வேண்டும்.

சுப்பய்யா எங்கோ பார்த்துக் கொண்டு பேசுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/224&oldid=1050161" இலிருந்து மீள்விக்கப்பட்டது