பக்கம்:உத்தரகாண்டம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    225

சாதுரியங்கள் சேர்ந்தன. அதனால அடுத்த களை எடுத்தல் நான்தான்...”

“என்னமோ இந்தி எதிர்ப்புச் சூழலில் ஒட்டாம வடக்கே போயிட்டன்னு தான் நினைச்சிருந்தேன். அய்யாவிடம் வந்து நீ அப்படித்தான சொல்லிட்டுப் போனே?”

“ஆமாம்மா. இதெல்லாம் மோசமான பண்பாட்டு ஒழுக்கச் சிதைவுகளில் கட்டிய அரசியல் ஆட்சிகளில் விளைந்த பயன்கள். மது விலக்கை எடுத்து, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கடைதிறந்து மது சாரத்தை ஓடவிட்டது, சினிமா கடைவிரித்த இழிவுகள், ‘கற்பழிப்பு’ என்ற சொல்லே உச்சரிக்கச் கூசிய ஒழுக்கங்களை பத்திரிகைளெல்லாம் ‘மஞ்சளாக’ மாறியதால் சுத்தமாத் துடைத்தன. (ஏ) சினிமாங்கற முத்திரைதான் பணத்தை அள்ளித்தரும்னு, இந்த சென்னைப் பட்டினத்து சாலை, மூலைமுக்குகளெல்லாம் விளம்பரங்கள்... மருதமுத்து, மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமானானார். எனக்கு உயிரை விடுவது கோழைத்தனம்னு பட்டது. மழலைப்பள்ளி இருந்தது. அய்யா இருந்த நாளில் பக்கத்தில் இருந்த குப்பத்துக் குடிசைப் பிள்ளைகள்கூட வரும். அநு அம்மா வந்த காலத்தில் மழலைப்பள்ளிக்குக் குடிசைக் குழந்தைகள் வருவதில்லை. ஓரளவு வசதியாக இருக்கும் குழந்தைகள் வந்தன. எல்லாக் குழந்தைகளும் வெளியே இருந்து தான் வந்தார்கள். தோட்டக்காரன், காவலாளி யாருக்குமே உள்ளே குடும்பம் இல்லை. அநேகமாகத் தங்கும் பிள்ளைகள், டீச்சர்களுக்கு மட்டுமே விடுதி. அநு அம்மா இங்கே வரும் நாட்களில் குழந்தையை விட்டுவிட்டு வருவார்கள். அது தானாக ஆடிப்பாடிட்டிருக்கும். அநுசுயா டீச்சர், நான், ஆபீசில் இருந்தால் அது அங்கேயே இருக்கும். திடும்னு ஒருநாள் வித்யாலயாவின் வெளிப்புறச்சுவரில், என்னையும் அநுவையும் பற்றி, கேலிப்படம் போட்டிருந்திச்சி. அநு சுப்பய்யான்னு எழுதி, “நாங்க புதிசா கட்டிக்கிட்ட ஜோடி

உ.க.-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/227&oldid=1050166" இலிருந்து மீள்விக்கப்பட்டது