பக்கம்:உத்தரகாண்டம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226   ✲   உத்தரகாண்டம்

தானுங்க”ன்னு பாட்டுப் போட்டிருந்திச்சி. குழந்தை திகைச்சுப்போயி பாக்குறப்பல...

“நல்ல வேளையா, நான் காலம சூரியன் உதிக்கும் போதே நடக்க வெளியே வந்தவன் பாத்திட்டேன். ஒடனே உள்ளே கொட்டடிக்குப் போயி தேங்கா மட்டையக் கொண்டு வந்து அழிச்சேன். நேரா பராங்குசத்து வீட்டுக்குப் போனேன். உள்ளாறதான அப்ப வீடு? அவங்க சம்சாரம், வாசல்ல கோலம் போட்டிட்டிருந்தாங்க. ‘இந்தாங்கம்மா, மருதமுத்துகிட்ட யாரோ வெளயாடினாங்க, அந்த நெருப்புல அவரு உசிரைக் குடுத்தாரு. இப்ப ஏங்கிட்டயும் அதே வெளயாட்ட ஆரோ ஆடுறாங்க? நானொண்ணும் உசுரவுடமாட்டேன். சத்தியத்த நிரூபிக்க, குத்தம் பண்ணுறவங்களக் கொண்டு வர எனக்கு முடியும். ஆனா, சம்பந்தபட்ட, ஒரு அப்பாவித் தாய்க்கு அது கேடாக முடியும்?’ என்று சொல்லிவிட்டு, சுண்ணாம்பை எடுத்து நானே அழித்தேன். அடுத்த நாளே கால் கடுதாசிய நீட்டிட்டு இங்கே அய்யாட்ட வந்து சம்பிரதாயமாச் சொல்லிட்டுப் போனேன்...

“அப்ப போனவன், இந்தப் பட்டணத்து மண்ணை இப்படி வந்து மிதிப்பேன்னு கொஞ்சமும் நினைக்கல...”

அவன் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.

“அட... சுப்பய்யா? சுப்பையா? என்ன இது? ஏம்ப்பா, ஏதோ நடந்திச்சி. அதுக்குப் போய் இவ்வளவு வருத்தப்படுற? அது பிறகும் இங்கு வந்திட்டுத்தானிருந்தா. ரெண்டு வருசத்துல அவளும் புருசன் கூடப் போறதாச் சொல்லிட்டுப் போனா. அய்யா இறந்தபோது அவ பேப்பரில ‘தியாகின்’னு கட்டுரை எழுதியிருந்ததா நிக்கெலஸ் டாக்டரு படிச்சிச் சொன்னாரு, கூட்டத்துல...”

அவன் தேறி முகத்தைத் துண்டால் துடைத்துக் கொள்கிறான்.

“தாயம்மா, நா இப்ப போறேன். மணிக்கூண்டு பக்கத்துலதான் பழைய ஆளு, ராமலிங்கம்னு, அங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/228&oldid=1050168" இலிருந்து மீள்விக்கப்பட்டது