பக்கம்:உத்தரகாண்டம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    229


இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

“உங்கிட்ட சொல்றதுக்கிண்ணாம்மா; சருக்கார் ஆசுபத்திரி வேல வந்திச்சி. எனக்கு ஒரு நோவுன்னா, போயி வயித்தியம் பாத்துக்கலாம்... இப்ப... அந்த ஆசுபத்திரி வாசலுக்கே போவுறதுக்கில்ல...”

“வாரம் ஒரு தபா உங்கள வந்து பாக்குறதில்ல?”

“அதும் பேச்ச வுடும்மா. நா நெனச்சாப்புல அது இல்ல. போன வாரம் வந்திச்சி. நா, கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லிச்சி. நா ஒண்ணும் பேசல. அந்தப்பய இன்னா செஞ்சான்? படிக்கிறப்பவே, லவ்வுன்னு ஆயி அப்பனுக்குத் தெரியாமயே கட்டிக்கிட்டான். பொண்ணுகூட பெரி...வூடு புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலைக்குப் போவணும். அப்ப வந்து ஆயியக்கூப்புடுறான். இவ, மண்ணத்தட்டிட்டுப் போறா... தனி வூடுதான வச்சிகிறாங்க? அப்பா, நீங்க வாங்கன்னு கூப்புடல. போம்மா...”

குறையே சொல்லாத மனிதன். தன் மக்கள் கடைத்தேற கூழையாகி எங்கெங்கோ கவடு தெரியாமல் புகுந்து புறப்பட்டவன். அவனுக்கும் தன் மான உணர்வு, காயப்பட்டிருக்கிறது.

“ஆரோ ஒரு பெரி... டாக்டராம். வயசு அம்பதாவுதாம். இது... தேவையாம்மா? எங்கூரு பையனே ஒருத்தன் மருந்து கடை வச்சிகிறான், கன்டோன்மென்ட் பக்கம். ‘மாமா, எப்டிகிறே’ன்னு விசாரிப்பன். இது எப்பவானும் வந்து கண்டா, கேலி பேசுவா. ஒரு அஞ்சு சவர அப்டி இப்டியா சேத்து வச்சிகிறே. நெல்ல படியா ஒரு கலியாணம் கட்டி வச்சி, கெடக்கலான்னு நெனச்சது கெனாவாப்பூட்டுது.”

“நீங்க கலியாணத்துக்கே போவலியா?”

“நா புள்ளவூட்ல போயி, என் சம்சாரம் கையில அத்தக்குடுத்தே... ஒரு சவரன் மோதிரம், மூணுசவரன் செயின். ஒரு சவரன் காதுக்குத் தொங்கட்டானும், பூமாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/231&oldid=1050226" இலிருந்து மீள்விக்கப்பட்டது