பக்கம்:உத்தரகாண்டம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    231

பண்ணிகிறான். அயுதுகினே வெளியே போயிட்டா. அப்பால, மக்யா நா போயி, நாஞ்சொன்ன. உன்னிய கல்யாணம் பண்ணிகிறே சம்மதமான்னே.

“நாயுடு சாருக்கு ரொம்ப சந்தோசம். “மண்ணாங்கட்டி, நீதா நல்ல மனிசன். நீ வெறும் மண்ணில்ல. தங்கக் கட்டி!”ன்னு சொல்லி, அவுருதா இருநூறு ரூவா செலவு செஞ்சி, திருநீர்மலைக்கு இட்டுப் போயி கட்டி வச்சாரு. அவ, அவங்க வீட்ல வேல செஞ்சா. நல்ல மனிசன். லீக்கோ கரியுமில்ல. அவுரு, அந்தம்மால்லாம் பூட்டாங்க. வூட்டையும் இடிச்சிட்டாங்க...”

“சுவரோடோனும் சொல்லி அழு” என்று மனச் சுமையைக் கொட்டுகிறானோ?

“அவ இப்ப, புருசன் பெரிசில்ல, வசதியாகிற மகம்வூடுதா பெர்சுன்கிறா. மருமகப் பொண்ணு டக்குபுக்குனு வூட்டுக்குள்ளாறவே ஷூ போட்டுகினு தஸ்ஸுபுஸ்ஸு இங்கிலீசில பேசுறா. ‘செவுந்தி, உனுகு இது தேவயா? யார் யாரோ, எசமானுங்க, வூட்ல, சம்பளத்துக்கு வேல செஞ்சம். அல்லாருமே நன்னி விசுவாசமா கீறாங்க. ஆனா, பெத்தவங்கள வேலக்காரங்கன்னு நெனக்கிற எசமானுவ தேவயா? வா, போவலாம்’ன. அட, போய்யா, நம்ம புள்ளிங்கதான். எனக்கு ஒண்ணும் கொறயில்லன்னிட்டா. பெத்த புள்ளிங்களே நம்ம மதிக்கல. பேரப்புள்ளிங்களா மதிக்கப்போவுது?... சரி, வாரம்மா. உங்கிட்டப் பேசுன. தலவலி கொறஞ்சா போல கீது... வாரம்மா...”

“ஏய்யா, கெளம்பிட்டீங்க? அப்ப தனியே சமையல் பண்ணி சாப்பிடுறீங்களா?”

அவன் திரும்பிப் பார்க்கிறான். “இல்ல, நானும் தனியாதா இருக்கிற. அட, வயிசான காலத்துல, ஒரு பிடி சோறு, தண்ணி நான் குடுக்கமாட்டனா? ஒரு கஞ்சி, கசாயம் எதுன்னாலும்...” அந்தச் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/233&oldid=1050230" இலிருந்து மீள்விக்கப்பட்டது