பக்கம்:உத்தரகாண்டம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232   ✲   உத்தரகாண்டம்


கையெடுத்துக் கும்பிடுகிறான். “ஒங்க நெல்ல மன்சு புரியிது. என்னிக்காலும் வுயுந்து போனா, வாரன், வார பெரி...ம்மா?” என்று செல்கிறான்.

பொய்யும் களவும் வஞ்சகமும், கஞ்சிக்கில்லாத வறுமையிலும் உடலுழைப்பிலும் பிறக்கவில்லை.

உலகில், இன்னமும் பரிசுத்தங்களும் தன்மான உணர்வுகளும், நேர்மைகளும் இருக்கின்றன. காந்திஜியின் சத்திய வாழ்வைப்போலவே இந்த மண்ணாங்கட்டியின் வாழ்வும் சத்தியமானதுதான். இந்த சத்திய அப்பனின் பரம்பரை, பொய்ம்மைகளால் கவரப்பட்டு அந்த மாயையிலேயே முழுகுகிறது. ராதாம்மாவின் பையன் எப்படி இருப்பான்?

.....

அன்றும் மறுநாள் காலையிலும் சுப்பய்யா வரவில்லை.

ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக நிச்சயம் வருவான் என்று நம்பியதும் நடக்கவில்லை.

மாலை ஐந்து மணிக்குத் தன் ஜோல்னாப்பையுடன் வருகிறான்.

“வாப்பா, நேத்திலிருந்தே எதிர்பார்த்திட்டிருந்தேன். ஆசுபத்திரிக்கு ஊசி போட கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன நெனப்பு...”

“...அடடா... மறந்துபோயிட்ட. இப்ப கெளம்புங்க போயி ஊசி போட்டுட்டு வந்திடலாம்?”

“அட... அதெல்லாம் வாணாம். நீ இப்ப உக்காரு. ஒரு டீ போட்டாந்து குடுக்கட்டுமா?”

“அதெல்லாமும் வச்சிருக்கீங்களா?...”

“நான் சாப்பிடுறதில்லன்னாலும் வச்சிருப்பேன். யாருன்னாலும் வந்தா கெடக்கட்டும்னு. ஒரு துாள் பாக்கெட்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/234&oldid=1050231" இலிருந்து மீள்விக்கப்பட்டது