பக்கம்:உத்தரகாண்டம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    237


அந்தக் குழந்தை ‘பாட்டி’ என்றழைத்துக் கொண்டு மேலே வரும். குழந்தை பெயர் பவானி. “பவானி காய்கர்தோ?” என்பார்.

தாத்தா “மீ ஜேவ்லா” என்று அது மராத்தியில் பதில் சொல்லும். தன் கவனம் சிதறக்கூடாதென்று அவன் கதவை ஒருக்களித்துக் கொள்வான்.

மாலையில் சில தமிழ் மாணவர்கள் அவனிடம் வந்து இந்தி கற்றுக் கொண்டார்கள். எல்லோரும் பையன்கள். ஒரு தடவை அந்தக் குழந்தை அப்போது அவன் அறைக்குள் வந்தது. “பாட்டி இல்லே?”

“இல்ல. அவங்கல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க. நீ இப்ப சமர்த்தா, நல்ல பிள்ளையாக் கீழே போயிடம்மா, கிளாஸ் நடக்குதில்ல?” என்று அனுப்பி வைத்தான்.

அப்போது குளிர்காலம். விடுப்பு நாட்கள். வீட்டுக்காரர்கள் ஊரிலில்லை. அவன் அறையை ஒட்டடை அடித்துச் சுத்தம் செய்தான். போர்வை தலையணை உரை, சட்டை எல்லாவற்றையும் கீழே கொண்டு சென்று சோப்புப் போட்டுத் துவைத்துப் பிழிந்து விட்டு நீராடினான். சில்லென்று நீராடிவிட்டு வருகையில் கீழ்த்தளத்து சமையலறையில் இருந்து குழந்தை அலறும் ஒலி கேட்டது. ‘ஒண்ணுமில்ல... இதபாரம்மா...’ என்ற சமாதானங்கள் எடுபடவில்லை. தாளாத நோவில், குழந்தை துடிக்கிறது; தவிக்கிறது. அவன் மேலே துணியைக் கொண்டு செல்கையில் பின் வாயில் கதவு திறந்தது. ‘ஹீரா... ஹீரா...?’ யாருமில்லை. அவள் அலறிப் புழுவாய்த் துடிக்கும் குழந்தையை எடுத்துக் கொண்டு முன்புறம் போகையில், தொட்டில் குழந்தையும் சேர்ந்து அழுதது.

“குக்கரை இறக்கிட்டு, பருப்பை எடுத்திட்டிருந்தேம்மா, சீலயப்புடிச்சி இழுத்து வம்பு பண்ணினா. அண்ணி அவளுக்கு வயிறு மந்தமா இருக்கு, உடம்பு சுடுது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/239&oldid=1050240" இலிருந்து மீள்விக்கப்பட்டது