பக்கம்:உத்தரகாண்டம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    239


அவர் பார்த்துவிட்டு “நல்லவேளை, குளிர்ந்த ஐஸ் வைத்தீர்கள்” என்று சொல்லி, களிம்பு தடவி, பாதுகாப்பாக ஆங்காங்கு மருந்துத்துணி வைத்து பிளாஸ்திரி போட்டார். கையில் ஒரு சாக்லேட் கொடுத்தார்.

“யார் பெத்த புள்ளயோ? சமயத்துக்கு வந்து உதவி பண்ணின. இல்லேன்னா, என்ன செய்யும் அது?... அவுங்க ரெண்டுபேரும் பெரி புள்ளயக் கூட்டிட்டு ஹாயா லீவுன்னு பம்பாய் போயிட்டாங்க. நாளக்கி மதியம் வராங்க. தம்பி சமயத்துல உதவின...” என்று நன்றி சொன்னாள் பெரியவள்.

இப்படித்தான் பரிசயம் தொடங்கியது. மறுநாள் பம்பாயில் இருந்து வந்த மகன், காத்திருந்து, இவன் வாசகசாலைக்குப் போகும் நேரத்தில் வாயிலில் மகளுடன் நின்றிருந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்! நீங்க தமிழ்க்காரர்னு இப்பதாந் தெரியும். அம்மா சொன்னாங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஸார். ரோட்டில விழுந்தாலே கவனிக்காம போற காலம் இது... டாக்டருக்கு என்ன ஆச்சு ஸார்?”

“நோநோ... அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க ஒண்ணும் குடுக்க வாணாம். பாப்பா, எப்படியிருக்கு?” என்றான்.

“அங்கிளுக்குத் தேங்க்ஸ் சொன்னியா?... நீங்க சாக்லேட் வாங்கிக் குடுத்தீங்களாமே? ரொம்ப சேட்ட ஸார்.”

அவன் உள்ளே அழைத்ததை மென்மையாக மறுத்து விட்டு வெளியேறினான்.

பொள்ளிக் கொப்புளம் கிளம்பாமல் சூட்டுக்காயம் ஆறிவிட்டது. அதிகம் சிவப்பில்லை என்றாலும் இளந்தோலில் தேங்காயெண்ணெய் பளபளக்க குழந்தை வருவாள். இதற்காகவே அவன் மிட்டாய் வாங்கி வைத்திருப்பான்; கொடுப்பான்.

பத்து நாட்கள் சென்ற பின் ஒரு நாள், வெயில் படும்படி, பெரியவள் வாயிலுக்கு நேராகக் காலில் எண்ணெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/241&oldid=1050244" இலிருந்து மீள்விக்கப்பட்டது