பக்கம்:உத்தரகாண்டம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    241

“...அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என்றான் அவன். சாரதா!... அம்மா... மருமகள் வந்தாள். “உள்ள வாங்க ஸார். எங்களுக்கு டயம் இல்லாம போயிடுது. வாரத்தில ஒரு நாதா லீவு... அம்மா சொல்லிட்டே இருக்காங்க. பையனக் கூட்டிட்டு அவுங்க ‘டென்டிஸ்ட்’ கிட்டப் போனாங்க. எனக்கு வாஷிங், அது இதுன்னு வேலை. சங்கரி மட்டும் இல்லன்னா இந்தக் குடும்பம் நாறிப்போகும்.” மாமி யாருக்காகத்தான் அவள் அழைத்திருக்கிறாள்.

மேலே சாவித்திரி அம்மாவும் சுக்டன்கர் பாயும் ஊரிலிருந்து வந்தார்கள். அவர்களிடம் சங்கரியின் தாயார் எல்லாம் பேசியிருக்கிறாள். அவர்கள் இருவரும் அவனிடம் வந்து பேசினார்கள்.

‘சங்கரிக்கு வயதுக்கு வந்த நேர சாதகம் சரியில்லையாம். இதனால் பெண் கேட்டு வரும் இடங்களில் வரன் அமையவில்லை. சங்கரியின் தங்கைக்கும் கூடக் கல்யாணமாகிவிட்டது. சுக்டன்கரும், சங்கரியின் அப்பாவும் ஒரே தணிக்கைத் துறையில் வேலை செய்தவர்களாம். இந்த வீட்டுக்கு அவர்கள் வந்த போது சங்கரிக்குப் பதினைந்து வயசிருக்குமாம். அவர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகிப் போன போதெல்லாம் குடும்பத்தைத் தூக்க முடியாமல், சங்கரியையும் அண்ணன்களையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர் ஓய்வு பெற்று ஒரு வருசம் கூட இருக்கவில்லை. இங்கே இருக்கும் அண்ணன் இரண்டாவது அண்ணன். மூத்தவன் டெல்லியில்-ஓர் அக்கா-தங்கை. தங்கைக்கு இங்கே வந்து தான் கல்யாணம் செய்தார். அவர் இறந்து போன மறுவருடமே, அந்தம்மா ‘ஸ்ட்ரோக்’ வந்து படுத்துவிட்டார். கை கால் அசைக்க முடியாமல் இருந்தது. அவன் பார்த்தபோது - இப்போது தேவலையாக இருக்குது.

சங்கரிக்குக் கல்யாணம் என்று யார் மூலமாக வேனும் வரன் வந்தாலும், அண்ணனும் அண்ணியுமே தடுத்து

உ.க.-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/243&oldid=1050246" இலிருந்து மீள்விக்கப்பட்டது