பக்கம்:உத்தரகாண்டம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    243

இடத்தில் மாரடைப்பு வந்து காலமானார் என்று கேள்விப் பட்டான்.

நன்றி கொன்ற பாவியாக, சாவித்திரியம்மாளைப் பார்க்கக்கூட அவன் போகவில்லை.

மேலும் ஒரு வருசமாயிற்று. ஒருநாள் அநுமான் மந்திர் பக்கம் ஒரு மாணவனுடன் நடந்து கொண்டிருந்தான்.

சங்கரி கையில் காய்கறிப் பையுடன் குறுக்கிட்டாள்.

“மன்னிச்சுக்குங்க..” என்றாள் தலை நிமிராமல்.

“அம்மா இறந்து போயிட்டாங்க. சாவித்திரி அம்மா தான் சொன்னாங்க, உங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க..” என்றாள்.


“ம்... அதுக்குன்னு வழில வந்து மறிக்க வேணாம்...” என்றான். அப்படி ஏன் கடுமை காட்டினான்? பொறிகடலை நடுவே கருக்கென்று கடிபடாமல் ஒன்று இருக்குமே? அப்படி... ஏன்? ஏன் அப்படி வெடுக்கென்று பேசினான்? என்ன காரணம்? பயமா? பயம் அவன் மீதே அவனுக்குப் பயம். ஏனென்று தெரியவில்லை. பயத்தில் எழுந்த வீம்பா, வீம்பில் எழுந்த பயமா? புரியவில்லை.

அந்த வருசமே மராத்வாடா கிளைக்குப் போனான். எதிர்பாரா விதமாக பேஷ்வா பார்க்கில் சாவித்திரி அம்மாவைப் பேரக் குழந்தைகளுடன் பார்த்தான்.

“சுப்பய்யா?... எப்படி இருக்கே?... உனக்குத் தெரியுமா? நீ வருவேன்னு அந்தப் பொண்ணு சங்கரி ரொம்ப எதிர்பார்த்திட்டிருந்தா. இப்ப அவங்களே இத்தனை வருசமா இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. புருசன் பெண்சாதி இரண்டு பேருக்கும் டிரான்ஸ்ஃபர் கிடச்சிடிச்சு. டெல்லிக்குப் போயிட்டாங்க...” என்றாள் வருத்தத்துடன்.

சிறிது காலத்துக்குப் பிறகு அவனும் நாக்பூர் வித்யா பீடத்துக்குப் போனான். இத்தனை வருசங்களுக்குப் பிறகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/245&oldid=1050249" இலிருந்து மீள்விக்கப்பட்டது