பக்கம்:உத்தரகாண்டம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244   ✲   உத்தரகாண்டம்

புனேயில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தான். பழைய பள்ளித் தலைவர் கங்காதர் சர்மா, “சுப்பய்யா, உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. மூணு நாலு மாசமிருக்கும். வச்சிருக்கிறேன். ஸ்கூல் பக்கம் வா, நாளைக்கு!” என்றார்.

அந்தக் கடிதம் ஏதாக இருக்கும் என்ற யோசனையே அவனுக்கு எழவில்லை. பழைய பள்ளிக்கூடம் பத்து வருசமாகுது, பார்ப்போம் என்றுதான் போனான்.

அந்தக் கடிதம்தான் அவள் பார்த்த கடிதம்.

“அம்மா, நான் வந்து விசாரித்து மணிக்கூண்டு பக்கம் மெஸ் அம்மா சொன்னதும், இங்கே ஸ்கூலுக்குத்தான் வந்து நேராகப் போனேன். தாய்மார், பிள்ளைகளைக் காலையில் பள்ளியில் விட்டுவிட்டுப் போனால், இவள்தான் அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டுக்கழைத்து வந்து தாயோ தகப்பனோ மாலை, ஆறு அல்லது ஏழு மணிக்கு அழைத்துச் செல்லும் வரை வைத்துக் கொள்வாளாம். பள்ளியில் விசாரியுங்கள் என்றார்கள். நான் வாட்ச்மேன் தடுத்ததைப் பொருட்படுத்தாமல் உள்ளே போனேன். அந்த ஆபீசில், பட்டுஜிப்பா உருத்திராட்சம் ஸ்படிகம், திருநீறு குங்குமம் என்று உட்கார்ந்திருந்தான். ‘சங்கரின்னு இங்க கிரீச் வச்சிருந்தாங்களாமே’ன்னு வாயெடுத்ததும், அவன் முகம் சிவந்து விட்டது.

“யார்ரா இவங்க? ஏய்யா? எங்கேந்து வரீங்க, சங்கரி, கிங்கரின்னு, கழுத்தப் புடிச்சி வெளியே தள்ளுய்யா, வாட்ச்மேன்! வாட்ச்மேன்! சீய்! ஒரு நடத்தை கெட்ட கழிசடை, அதைத் தேடிட்டு ஆளாளா, இங்க வரானுவ? நானே அவளக் காணமேன்னு சொல்லி, அண்ணன்காரன் யாருன்னு கண்டு தகவல் சொல்லச் சொன்னேன். கேடு கெட்டது ஸ்கூலுக்குக் கெட்ட பேரு. எவங்கூட ஓடினாளோ?... உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட்ட சொன்னாளாம். எச்.ஐ.வி. இருந்திச்சின்னு சொல்லிகிறாங்க... கருமம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/246&oldid=1050250" இலிருந்து மீள்விக்கப்பட்டது