பக்கம்:உத்தரகாண்டம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    245


அவன் கழுத்தைப் பிடிக்கப் போயிருப்பான். அதற்குள் வாட்ச்மேன் இவனை வெளியில் கொண்டு வந்து தள்ளிவிட்டான்.

“என்னால தாங்க முடியல... தாங்க முடியல. கத்தியால் குத்திச் செய்யும் கொலையைவிட மாபாதகம் இது. இந்தப் பாதகத்தைச் செய்தவன் நான். நான்... அவளுடைய நெருப்புப் புனிதத்துக்குக் குலைத்து அழித்த பின்னும் களங்கம் கற்பிக்கிறாங்களே? எந்த டாக்டர்... எவன்... இவனுகளை சம்ஹாரம் பண்ணனும்...”

கண்கள் சிவந்து வெறிபிடித்த நிலையில் அவன் வெளியே பாய்கையில் நல்ல வேளையாக ரங்கன் எதிரே வருகிறான்.

“இன்ன சாரு?... எதானம் போட்டுட்டாயா?” என்று குடிப்பது போல் சாடை காட்டுகிறான்.

அவனை ஒரு தள்ளுத்தள்ளும் போது, அவள் விரைந்து முன் வாயில் கதவைச் சாத்துகிறாள்.

“சுப்பய்யா, வேண்டாம், போவுதுப்பா, அது அவ விதி... ஆறுதல் கொள்ளு. ரங்கா, உனக்கு ஒண்னுமில்ல, நீ போ.” மாடிப்படி அறைக்கதவைத் திறந்து அங்கே அமரச் செய்கிறாள்.

“சுப்பய்யா, இப்படிப் பொங்குவதால தீர்வு இல்ல- லட்சோப லட்சம் பெண்கள், படிக்கிறாங்க வேலைக்குப் போறாங்க. ஆனா, அவுங்களுக்கு வேணுங்கற மனிச மரியாதை கிடைக்கல... ஆறுதல் கொள்ளப்பா...”

அவன் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான். கதவை மெள்ளச் சாத்திக் கொண்டு வருகிறாள்.


25


சுப்பய்யா வந்து போனது விடியற்காலைக் கனவு போல் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/247&oldid=1050251" இலிருந்து மீள்விக்கப்பட்டது