பக்கம்:உத்தரகாண்டம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252   ✲   உத்தரகாண்டம்


“நீங்க சாப்பிடுங்க, தாதிமா!”

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நெஞ்சு நெகிழப் பார்க்கிறாள்.

மனது நிறைந்தவளாகத் தானும் மீதிச் சோற்றைப் பிசைந்து சாப்பாட்டை முடித்துக் கொள்கிறாள். அவள் பாத்திரங்களைக் கழுவும் வரை, அந்தப் பெண் கூடத்திலேயே படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இவள் கிளம்பும் போது, ரங்கன் மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஊன்றியிருக்கிறான் “சீ! பூச்சிங்க... உடம்பெல்லாம் தடிச்சிப் போச்சி!” என்று கிளைகள் இழுக்கும் ஆள் சொல்கிறான்.

“இதை எப்பவோ வெட்டிப் போட்டிருக்கணும். அப்படித் தள்ளிப்போடு. கிரசின் ஊத்தி எரிச்சிடலாம்.”

காதில் கேட்டும் கேட்காமலும் அவள், “ரங்கா, நா கொஞ்சம் வெளியே போறன். சொல்லாம போயிட்டேன்காத! வாசக்கதவப் பூட்டிக்க!” என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். அப்போதுதான், அவன் அநுவின் மகளைப் பார்க்கிறான்.

“யாரிவங்க? அன்னிக்கு வந்திட்டுப் போனாரு... இது...? என்று அவன் யோசனையுடன் “எங்கேம்மா, இந்த பக்கம்?” என்று கேட்கையில் அவள் விடை கொடுக்காமல் நடக்கிறாள்.

“ஏம்மா, உம் பேர் மறந்திட்டது, உம் பேரென்ன?”

அவள் புன்னகை செய்கிறாள். “நிசா... நிசாந்தினின்னு பேரு. இரவு பூக்கும் பூன்னு எங்கப்பா பேரு வச்சாராம். நான் ராத்திரிதான் பிறந்தேனாம்...”

“ஆமா, பாரிஜாதப்பூ ராத்திரிலதான் பூக்கும். பக்கத்தில் அந்த மரம் இருந்திச்சி. ஒம்பது மணிக்கு கும்முனு வாசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/254&oldid=1050278" இலிருந்து மீள்விக்கப்பட்டது