பக்கம்:உத்தரகாண்டம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    253

வரும். இப்பக்கூட இருந்திச்சி. பாம்புவந்திச்சின்னு வெட்டிப் போட்டானுவ... உங்கப்பா இப்ப வீட்டோட இருக்காரா? ரிடயராகி இருப்பாங்க...”

“இல்ல... அப்பா போயிட்டாங்க..”

அவளுக்கு அந்த சாமியார், சித்தப்பா என்று சொன்ன உறவு முறை, அவர் தங்கிய போது, கூறிய செய்தி ஊசிக்குத் தாய்த் தைக்கிறது. இவளிடம் அதையெல்லாம் கேட்கத் தெரியவில்லை. நீள நெடுக சாலையே வந்து இரு புறங்களிலும் குடியிருப்புகள். இடையே வேலைக்காக இடம் பெயர்ந்து குடும்பமும் குட்டியுமாகத் தங்கும் முட்டு முட்டான குடிசைகள்; சாக்கடைகள். ஊர்க்குப்பைகளை எல்லாம் கொண்டு கொட்டும் இடம்... ஒரு காலத்தில் ஏரியல்லவா? ‘பாவிகளா! சுற்றுச்சூழல் மாசு என்று சொல்லிக் கொண்டு!’ ஈக்கள் மொய்க்கின்றன. நிசா முகத்தை வாயை சேலைத்தலைப்பால் மூடிக் கொள்கிறாள்.

“சீ, எந்த ஊரிலேந்து இவ்வளவு கழிவையும் கொண்டு கொட்டுறாங்க?...”

“முகத்தை அதான் மூடிட்டேன். அதனாலதான் ஆட்டோ வச்சிட்டு வரலான்னே...”

அந்த இடம் தாண்டிய பிறகு, சாலையோரங்களில் மரங்களின் பசுமை விரிகிறது. ஒரு பக்கம் கல்லூரி...”

“இது இன்ஜீனியரிங் காலேஜ், இதுக்குள்ளதான் அம்ரித்ஸிங் அங்கில் இருக்கிறாங்க. அவருதான் இங்க... எங்களுக்கு இடம் ஏற்பாடு பண்ணினார். இதோ... இதான், வாங்க...”

“பரம்வீர் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு” என்று எழுதிய வளைவு வாயிலுக்குள் நுழைகிறார்கள். பத்துப் பதினைந்து வீடுகள் தாம் முழுமை பெற்றிருக்கின்றன. வீடுகளைச் சுற்றிய தோட்டங்கள் இப்போதுதான் உருவாகி வருகின்றன. வரிசையாகத் தெரியும் வீடுகளில் ஒன்றில் நிசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/255&oldid=1050281" இலிருந்து மீள்விக்கப்பட்டது